பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத் கட்சியில் இருந்து நீக்கம்

0

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்புடைய கிரிக்கட் வாரிய ஊழலை அம்பலப்படுத்தியதால் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத் பா.ஜ.க. வில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் குறித்து கீர்த்தி ஆசாத் வெளியிட்டுள்ள தகவல்களில் போலியான நிறுவங்களுக்கு ஒப்பந்தங்களை கொடுத்தது போலியான கணக்குகளுக்கு பணம் செலுத்தியதாக கூறுவது, மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களை மிகவும் அதிகளவிலான தொகைக்கு வாடகைக்கு எடுத்தது போன்ற தகவல்கள் அடங்கியுள்ளது.

இந்த ஆதாரங்களை தன் கையில் எடுத்துக்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது மான நஷ்ட வாக்கு தொடர்ந்த அருண் ஜேட்லீ, கீர்த்தி ஆசாத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். தற்பொழுது அவரை கட்சியின் மூத்த தலைவருக்கு எதிராக செயலாற்றினார் என்று கூறு கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

ஊழல் இல்லாத கட்சி என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடந்த தேர்தலில் களமாடிய பா.ஜ.க. தற்பொழுது செய்யாத ஊழல் இல்லை என்ற நிலையாகிவிட்டது.
இது குறித்து கீர்த்தி ஆசாத் தெரிவிக்கையில் ஊழலுக்கு எதிராக செயல்பட்டதால் தன்னை கட்சியில் இருந்து நீக்கி பா.ஜ.க. இந்த அளவிற்கு கீழ்த்தரமாக செயல்படும் என்று கொஞ்சம் கூட தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமான ஊழல்களை தான் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என்று பாருங்கள், இனி நான் அனைவருக்கும் இதனை எடுத்துக்கூறுவேன்”என்று கூறிய அவர் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களிடத்தில் முறையிடப்போவதாக கூறியுள்ளார். பா.ஜ.க வின் இந்த நடவடிக்கையால் தான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் டில்லி முதலமைச்சர் அலுவலகத்தில் சோதனை நடத்த முடியும் என்கிற பொழுது DDCA அலுவலகத்தில் ஏன் சோதனை நடத்த முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர் DDCA அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகள் முழுக்க ஆவணங்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

Comments are closed.