பா.ஜ.க.வின் கூண்டுக்கிளி என்.ஐ.ஏ.

0

கவர் ஸ்டோரி: பா.ஜ.க.வின் கூண்டுக்கிளி  என்.ஐ.ஏ.

-ரியாஸ்

மே 2014ல் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மத்திய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் நாட்டில் உள்ள ஜனநாயக துறைகள் மற்றும் விசாரணை அமைப்புகளை சீர்குலைத்து அவற்றை சிறுமைபடுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து நாட்டில் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சென்ற மாத இறுதியில் நீதித்துறையில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தின் ஒரு தூணான நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் அமைந்தன. பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள் இருக்கின்றன என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் அந்த புகலிடங்களும் தங்கள் கதவுகளை அடைப்பதை இந்த தீர்ப்புகள் உணர்த்துகின்றன.

நாட்டில் தீவிரவாதம் தொடர்பான வழக்குக்ளை விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை என்ற என்.ஐ.ஏ. 2008 மும்பை தாக்குதல்களுக்கு பிறகு அமைக்கப்பட்டது. மாலேகான், மொடாஸா, மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் பங்களிப்பை என்.ஐ.ஏ.விசாரணை அப்போது உறுதி செய்தது. இந்த வழக்குகளில் முன்னர் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகளின் விசாரணை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைமை வரை இட்டுச் சென்றதுடன் சாமியார்கள் போர்வையில் செயல்படும் தீவிரவாதிகளையும் அடையாளப்படுத்தியது. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து என்.ஐ.ஏ. விசாரித்த வழக்குகள் வேகத்தை இழந்தன, உண்மை குற்றவாளிகளுக்கு தாராளமாக ஜாமீன் வழங்கப்பட்டு ஒவ்வொரு வழக்கில் இருந்தும் அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டனர்.

என்.ஐ.ஏ. இயக்குநராக பணியாற்றிய சரத்குமாரின் பதவிக்காலம் அக்டோபர் 2015ல் முடிவடைந்த பின்னரும் மத்திய அரசாங்கம் அவருக்கு இரண்டு முறை பதவியை நீட்டித்ததும் கேள்விகளை எழுப்பியது. இவருக்கு பின் இந்த பதவிக்கு கொண்டு வரப்பட்ட குஜராத்தை சேர்ந்த யோகேஷ் சந்தர் மோடி, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். குஜராத் இனப்படுகொலை வழக்குகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த இவர், குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடிக்கு சம்பந்தமில்லை என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் இவர் நடத்திய மோசமான, மடத்தனமான விசாரணைதான் அந்த வழக்கில் நீதி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று குஜராத் உயர் நீதிமன்றம் இவரை கண்டித்தது. இவர் பதவிக்கு வந்த பின் தீவிரவாத வழக்குகளில் இருந்து இந்துத்துவ தீவிரவாதிகளை விடுவிக்கும் வேகம் அதிகரித்தது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.