பா.ஜ.க.வின் பெயர் மாற்ற அரசியல்!

0

பா.ஜ.க.வின் பெயர் மாற்ற அரசியல்!

சில மாதங்களில் மக்களவை தேர்தலை சந்திக்கவிருக்கும் மோடி அரசுக்கு, வளர்ச்சி சாதனைகள் குறித்து பேசுவதற்கு எதுவுமே இல்லை. எஞ்சியிருப்பது வகுப்புவாத அரசியல் மட்டுமே. அதன் ஒரு பகுதியாக தற்போது நகரங்கள், தெருக்களின் பெயர்களை மாற்றும் செயல்திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

2015 மே மாதம் அவுரங்காபாத் சாலை உள்ளிட்ட டெல்லியில் உருது/முஸ்லிம் பெயர்கள் சூட்டப்பட்ட ஏராளமான வீதிகளின் பலகைகளில் இந்துத்துவாவினர் கறுப்பு வர்ணத்தை பூசினர். அதே ஆண்டு அவுரங்காபாத் சாலையின் பெயர் மாற்றப்பட்டது. மத்திய அரசின் வழியை பின் தொடர்ந்து உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு உள்பட பல மாநில பா.ஜ.க. அரசுகள் பெயர்களை மாற்றும் அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றனர். 2016 ஏப்ரல் மாதம் ஹரியானா மாநில பா.ஜ.க. அரசு குர்கான் நகரத்தின் பெயரை குருகிராம் என்று மாற்றியது. மகாபாரதத்தின் கதாபாத்திரமான துரோணாச்சாரியார் அங்கு வாழ்ந்ததாக கூறப்படும் மூட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பெயர் மாற்றம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மொகல்சாராய் ரயில் நிலையத்தின் பெயர் தீனதயாள் உபாத்யாயா என்று மாற்றப்பட்டது. முஸ்லிம் ஆட்சியாளர்களின் அடையாளங்களை துடைத்தெறிவதே இந்த மாற்றங்களுக்கான நோக்கம். பழமையான நகரமான அலகாபாத்தின் பெயர் பிரக்யாராஜ் என்று மாற்றப்பட்டது. தீபாவளியையொட்டி நடந்த நிகழ்ச்சியொன்றில் யோகி ஆதித்யநாத் பைசாபாத் மாவட்டத்தின் பெயரை ‘‘ஸ்ரீ அயோத்தியா” என்று மாற்றம் செய்து அறிவித்தார். அஹமதாபாத், அவுரங்காபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களின் பெயர்களையும் மாற்றவேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக மத சகிப்புத்தன்மையின் சின்னமாக திகழ்ந்தவர் என்று இந்துத்துவாவினர் கூட அங்கீகரிக்கும் அக்பரின் பெயர் கேட்டால் கூட அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.