பிஜ்நோர் வன்முறை: வன்முறை கும்பலை தூண்டியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்

0

பிஜ்நோர் வன்முறைக்கு மூன்று பேர் பலியாகி மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரில் 21 பேர் தலைமறைவாக உள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களும் இந்த வன்முறை சம்பவத்திற்கு நேரடி தொடர்பில்லாதவர்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இது குறித்து காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டைரக்டர் ஜெனெரல் தல்ஜீத் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், இந்த வன்முறை கும்பலை அப்பகுதியின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஐஸ்வர்யா சவுத்ரி என்பவன் வழிநடத்தியுள்ளான் என்றும் இதனை உறுதி படுத்த போட்டோ ஆதாரங்களும் இருக்கின்றன என்றும் தற்போது அவன் தலைமரைவாகியுள்ளான் என்றும் விரைவில் காவல்துறை அவனை பிடித்டுத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா சவுத்ரி ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்பான அதிவக்தா சங் அமைப்பை சேர்ந்தவன். அப்பகுதி மக்கள், வழக்கறிஞரான இவன் பா.ஜ.க வுடன் தொடர்புடையவன் என்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் அரசியலில் நுழைய முயற்சித்து கொண்டிருந்தான் என்றும் கூறியுள்ளனர். கடந்த 2014 பொதுத் தேர்தகளில் இவன் தந்தை ராஜேந்திர குமாருக்கு பா.ஜ.க சீட் வழங்க இருந்ததாகவும் பின்னர் அது குன்வர் பார்தேன்றா என்பவருக்கு வழங்கப்பட்டது என்றும் தெரியவருகிறது.

பிஜ்நோர் தாக்குதல் குறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி அசிட் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், கைது செய்யப்பட்ட ஒருவரிடம் .315 துப்பாக்கிக்கான உரிமம் உள்ளது என்றும் அந்த துப்பாக்கி இந்த வன்முறைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறயுள்ளார்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களை விசாரித்த வரையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் எல்லாம் ஒரு கணப்பொழுதில் நடந்துவிட்டது என்றும் கூறியுள்ளனர். மேலும் இது ஒரு மத மோதல் என்பதற்கு இரு வேறு மதத்தினர் மோதியுள்ளனர் என்பதை தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Comments are closed.