பிரகாஷ் ஜவடேகர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்த மாணவிகள்

0

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழகம் தங்களது பெண்கள் விடுதியில் உள்ள அனைத்து மாணவிகளும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் வருகையின் போது விடுதியில் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்திருந்தது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “திரு.பிரகாஷ் ஜவடேகர் புதன் கிழமை நமது விடுதியை பார்வையிட வருகிறார். அதனால் விடுமுறையில் செல்லாத அனைத்து மாணவிகளும் விடுதியில் மதியம் 1 மணிக்கு விடுதியில் இருக்க வேண்டும். அந்நாளில் வருகைப் பதிவு கடுமையாக கண்காணிக்கப்படும். மேலும் வராதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த விடுதியின் மாணவிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவரது வருகை அங்கே விரும்பப்படவில்லை என்றும் பெண் பணியாளர்கள் மற்றும் மாணவிகளின் விஷயத்தில் UGC விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

தங்களது மடலில், “உங்களது வருகைக்கான அறிவிப்புடன், ஏற்கனவே பிற்போக்குத்தனமான விடுதி விதிமுறைகளில் பல மாற்றங்களை புகுத்தி பெண்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளனர்.

இன்னும், “ உங்களது அமைச்சகம் மற்றும் UGC  அந்த விதிமுறைகளை பல்கலைகழகங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி படுத்த தவறிவிட்டதால் உங்களுக்கு பெண்கள் விடுதியை பார்வையிடும் தகுதி இருப்பதாக நாங்கள் உணரவில்லை… இல்லை திரு.ஜவடேகர் எங்கள் விடுதியில் உங்களுக்கு வரவேற்பு இல்லை.” என்று கூரியுள்ளனர்.

Comments are closed.