பிரதமர் மோடிக்கு எதிரான கருத்து: ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்

0

இந்தியா டுடே குழுமத்தின் முன்னாள் மேலாண்மை ஆசிரியரான திலீப் சந்திர மண்டல், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாசிசத்திற்கு எதிராக விமர்சனங்களையும், தலித் அரசியல் குறித்த கருத்துகளையும் பதிவு செய்து வந்தார்.அண்மையில் மோடிக்கு எதிராக ஒரு கருத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.

தனது ஃபேஸ்புக் கணக்கை முடக்கியது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அரசு மற்றும் சங்பரிவார்களிடமிருந்து புகார் அளிக்கப்பட்டதா? என்று தெரிவிக்கவேண்டும் என்றும் கோரி மண்டல், ஃபேஸ்புக்கை அணுகினார். அரசியல் விமர்சனம் வெளியிட்டதற்காக கணக்கை  முடக்கியது கருத்து சுதந்திரம் குறித்து ஃபேஸ்புக் நடத்தி வரும் பரப்புரையை  பொய்ப்பித்துள்ளதாக சைபர் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டது.

யாகூப் மேமனின் மரண தண்டனைக்கு எதிராக கருத்து பதிவு செய்த  பி.அருந்ததி, சுதீஷ் சுதாகர், ராகுல் பசுபாலன் ஆகியோரின் கணக்குகளும் கடந்த மாதம் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.