பிரபல இந்துத்வா போலிச் செய்தி தளம் போஸ்ட்கார்ட் நிறுவனர் கைது

0

பிரபல இந்துத்வா போலிச் செய்தி தளம் போஸ்ட்கார்ட் நிறுவனர் கைது

வழமையாக முஸ்லிம்களுக்கு எதிராக அடிப்படையற்ற போலிச் செய்திகளை பகிர்ந்துவரும் இந்துத்வா தளமான போஸ்ட்கார்ட் நிறுவனர் மகேஷ் விக்ரம் ஹெட்கே, சமூகத்தை பிளவுபடுத்தும் அவரது பதிவுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 18 அன்று இந்த தளத்தில் ஜைன மதகுரு ஒருவர் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டார் என்ற போலியான செய்தியை இவர் வெளியிட்டதை தொடர்ந்து இவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் சமூகத்தை பிளவு படுத்தி அதில் அரசியல் லாபம் பெரும் நோக்கத்தோடு இந்த போலிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த கைது குறித்து உறுதி செய்த பெங்களூரு காவல்துறை ஆணையர் சுனில் குமார், ஹெட்கே ஜைன மதகுரு குறித்த போலிச் செய்தி வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த மார்ச் 13ஆம் தேதி சரவணபெலகோலா திருவிழாவிற்கு வந்த ஜைன மதகுரு ஒருவர் மீது குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மதகுருவை அங்கிருத்தவர்கள் முதலுதவி அளித்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஹெட்கேவின் போஸ்ட்கார்ட் போலிச் செய்தி தளமோ அந்த மதகுருவை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக செய்தி வெளியிட்டு சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயன்றுள்ளது.

இதனையடுத்து ஹெட்கே மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு புகார்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படியில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யபப்ட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஹெட்கே மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 153a(வேண்டுமென்றே கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கில் மக்களை தூண்டுவது.), பிரிவு 34, பிரிவு 120b, (கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல்), ஆகிய பிரிவுகளிலும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 இன் கீழும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்துடன் மற்றொரு பதிவில், கர்நாடகாவின் வரலாற்று தலைவரான ராணி சென்னம்மா பிரிட்டிஷாருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று போஸ்ட்கார்ட் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இன்னும் ஒனக்கே ஒபவா ஹைதர் அலியுடன் படுக்கை பகிர்ந்தார் என்றும் செய்தி வெளியிட்டது இந்த தளம். இதனையடுத்து இந்த தளம் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹெட்கேவின் இந்த கைது கர்நாடக சட்டமன்ற தேர்தல் வர இருக்கின்ற நிலையில், போலிச்செய்திகள் மிக அதிகமாக பரப்படும் தருணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹெட்கேவின் கைதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, ஹெட்கே தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு  66 இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பகுதி உண்மையை மறைத்து ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார்.

Comments are closed.