பிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது

0

பிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது

பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ISIவிற்கு இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை குறித்த பல தகவல்களை கொடுத்ததாக நிஷாந்த் அகர்வால் என்ற பொறியாளரை உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படைகள் இணைந்து நாக்பூரில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொறியாளரிடமிருந்து அவர் பாகிஸ்தானியருடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுலதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அகர்வாலின் தனிப்பட்ட கணினியில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் இது இந்திய ரகசிய சட்டத்தின் அடிப்படையில் மிகப்பெரும் குற்றம் என்றும் உத்திர பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இத்துடன் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு சமூக வலைதள கணக்குகளுடன் இவர் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ரூர்க் பகுதியை சேர்ந்த அகர்வால், ஐஐடி ரூர்க்கில் கல்வி கற்றவர். கடந்த நான்கு வருடங்களாக நாக்பூரில் வசித்து வரும் இவர் மார்ச் மாதம் திருமணம் செய்திருந்தார். இவர் 2017-2018 ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருது பெற்றதாக இவரது சமூக வலைத்தள பக்கங்கள் தெரிவிக்கின்றன.

அகர்வால் குறித்து சில தகவல்கள் உளவுத்துறையினருக்கு கிடைத்ததன் அடிப்படையில் அகர்வாலின் அலுவலகம் மற்றும் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது என்றும் அங்கு தங்களுக்கு மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ரூர்க்கில் உள்ள அகர்வாலின் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது என்றும் அவரை கஷ்டடியில் எடுத்து அவர் மீதான குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Comments are closed.