பிராந்திய நாடுகளுக்கான ஃபத்வாவுக்கும் வழிகாட்டலுக்குமான சட்ட மன்றம்

0

பிராந்திய நாடுகளுக்கான

ஃபத்வாவுக்கும் வழிகாட்டலுக்குமான

சட்ட மன்றம்

கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இப்பிராந்தியத்தில் சில நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாக உள்ளன. உலக முஸ்லிம் சனத்தொகையில் பெரிய இடத்தை வகிக்கும் இந்தோனேசியா இப்பிராந்தியத்தில் உள்ள ஒரு பெரிய நாடாகும். 261 மில்லியன் மக்களைக் கொண்ட இந்நாட்டில் முஸ்லிம்கள் விகிதத்தில் 87 வீதமாக உள்ளனர்.

212 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தான் இப்பிராந்தியத்தில் உள்ள மற்றொரு பெரிய முஸ்லிம் நாடாகும். இவர்களில் 94 வீதமானோர் முஸ்லிம்களாவர். இதுபோன்று பங்களாதேஷ் அடுத்த பெரிய முஸ்லிம் நாடாகும். சுமார் 163 மில்லியன் மக்களில் 90 வீதமானவர்கள் முஸ்லிம்கள். அத்துடன் மாலத்தீவு, மலேசியா, புரூனையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் பல நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 2011ம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் இந்தியாவில் சுமார் 172 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். இது இந்தியா சனத்தொகையில் முதலாவது பெரிய சிறுபான்மை சமூகமாகும். உலகில் மிகப் பெரிய முஸ்லிம் சிறுபான்மையினராக இந்திய முஸ்லிம்கள் உள்ளனர்.

இலங்கையைப் போன்று தாய்லாந்தில் ஓரளவு அதிகமாக முஸ்லிம்கள் உள்ளனர். சுமார் 10 வீதம் முஸ்லிம்கள் இவ்விரு நாடுகளிலும் காணப்படுகின்றனர். இலங்கையில் முஸ்லிம்கள் கிழக்குப் பிராந்தியத்தில் செரிவாக வாழ்வது போன்று தாய்லாந்தில் தென் பகுதியில் வாழ்கின்றனர்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.