பிரான்சின் மஞ்சள் சீருடை போராட்டம் கூறும் செய்தி என்ன?

1

பிரான்சின் மஞ்சள் சீருடை போராட்டம் கூறும் செய்தி என்ன?

பிரான்சில் நடைபெற்று வரும் கில்லெட் ஜாவ்ன்ஸ்’ என்ற மஞ்சள் சீருடை போராட்டம் உலகமெங்கும் கவனயீர்ப்பை பெற்றுள்ளது. நவம்பரில் துவங்கிய போராட்டம் முதலில் வைத்த கோரிக்கை நிறைவேறிய பிறகும் தொடருகிறது. கண்ணீர் புகை, துப்பாக்கிச்சூடு, வன்முறை, தீவைப்பு… என தீவிரமடைந்த போராட்டத்தில் ஐந்து பேர் இதுவரை மரணித்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்கள் காயமடைந்துள்ளனர். பழமையான நினைவுச் சின்னங்கள் பல தகர்க்கப்பட்டுள்ளன. பாரீஸ், போர்தோ, லியோன் மற்றும் துலூஸ் உட்பட முக்கிய பிரெஞ்சு நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் கைகலப்புகளும் ஏற்பட்டன.

பாரிஸிற்கு போராட்டம் புதுமையானது அல்ல. ‘மனிதர்கள் சுதந்திரமாகவே பிறக்கிறார்கள். சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வாழ்கின்றார்கள்’ என்ற ரூசோவின் சித்தாந்தத்தை உள்வாங்கிய பிரான்சில் போராட்டம் நடக்காவிட்டால் தான் ஆச்சரியமே. எதிர்ப்புகள், போராட்டங்கள், பன்முக சிந்தனைகளுக்கு இடமளிக்கும் அரசியல் பிரான்சில் உள்ளது. அதனால் அந்த நாட்டிற்கு நன்மைகளோடு, தீமைகளும் ஏற்பட்டுள்ளன. ஒரு மார்க்கத்தின் இறைத்தூதரை குறித்து மிக இழிவாக கேலிச் சித்திரம் வரைந்து வெளியிடும் சார்லி ஹெப்தோ போன்ற மாத இதழ் அங்கு செயல்பட முடியும். அதே பிரான்சில் மிக வேகமாக வளரும் இஸ்லாமிய சமூகமும் உண்டு என்று வாசிக்கும்போது தாராளவாதத்தின் இரட்டை வேடங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படுவதையும் காணமுடியும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Discussion1 Comment

  1. மாஷா அல்லாஹ், அருமையான கட்டுரை, மிக முக்கியமாக சங்க பரிவாரத்தை மரீன் லீ பென்னோடு ஒப்பிட்டது சிறப்பு