பிரான்ஸின் இஸ்லாமிய விரோத போக்கு!

0

பிரான்ஸின் இஸ்லாமிய விரோத போக்கு!

இஸ்லாத்தை அவ்வப்போது வம்புக்கிழுப்பது இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு கொண்டவர்களின் வாடிக்கை. முஸ்லிம்களின் புனித வேதம் குர்ஆன் மற்றும் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய முகம்மது நபி (ஸல்) குறித்து அவதூறுகளை அள்ளித் தெளித்து அதனை கருத்துரிமை என்று வெட்கமின்றி சொல்லவும் செய்வார்கள். இது ஏதோ குறுமதி கொண்ட சிலரின் மனப்பிறழ்வு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாமிய வெறுப்பு உலகில் தங்குதடையின்றி மேற்கொள்ளப்படும் வியாபாரம் என்று கூறலாம்.

பிரான்ஸில் வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை நபி (ஸல்) அவர்களை அவமானப்படுத்தும் விதமாக சித்திரங்களை வெளியிட்டது. உருவ வழிபாடு இல்லாத இஸ்லாமிய மதத்தில் அவர்களின் தூதரை சித்திரமாக வரைவதற்கும் அனுமதி கிடையாது என்பதை நன்கறிந்தே இந்த இழிசெயலை அவர்கள் செய்தனர். 2011இல் முதலில் இத்தகைய சித்திரங்களை வெளியிட்டாலும் முஸ்லிம்களை நோகடிப்பதற்காக அவ்வப்போது அந்த சித்திரங்களை மீள்பதிப்பும் செய்து வந்தனர். நவம்பர் 11, 2014இல் மீண்டும் கேலிச் சித்திரங்களை வெளியிட்டதை தொடர்ந்து ஜனவரி 7, 2015 அன்று அப்பத்திரிகையின் அலுவலகத்திற்குள் நுழைந்த சகோதரர்கள் இருவர் சரமாரியாக சுட்டதில் பத்து பத்திரிகையாளர்களும் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளுள் ஒருவர் முஸ்லிம்.

பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உலக முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை. சார்லி ஹெப்டோவின் இழிவான செயலுக்கு துப்பாக்கிச் சூட்டை சரிகாண முடியாது என்று கண்டிக்கவே … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.