பிரிட்டனில் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிப்பது சட்டவிரோதமாக அறிவிக்கப்படவுள்ளது

0

பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை பல நாட்டு அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அந்நாட்டு மக்கள் இஸ்ரேலின் அடிப்படை மனித உரிமைக்களுக்கு எதிரான இந்த ஆக்கிரமிப்பை முற்றிலுமாக எதிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இஸ்ரேலின் பொருட்கள் எதனையும் வாங்கமால் பொதுமக்கள் அந்நாட்டு பொருட்கள் மீது பொருளாதார தடை வித்தித்து வருகின்றனர். உலகம் முழுவதிலும் பல்வேறு நாட்டு மக்களும் இதனை ஒரு மக்கள் இயக்கமாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்திற்கு BDS என்றும் பெயரிட்டுள்ளனர்.

இதனால் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றன இஸ்ரேலிய நிறுவனங்கள்.இத்தகைய நிறுவனங்களின் பட்டியலில் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் இயங்கும் நிறுவனங்கள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு ஆயுதம் மற்றும் மனித வளம் முதலிய உதவிகளை செய்யும் நிறுவனங்கள் அடங்கும்.

இதனையடுத்து இஸ்ரேலிய பொருட்களை மக்கள் புறக்கணிப்பதை தடுக்கும் முயற்சிகளை மும்முரமாக செய்து வந்தது இஸ்ரேல். அதன் ஒரு பகுதியாக பிரிட்டனில் இனி இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிப்பது சட்டவிரோதம் என அறிவிக்க உள்ளது டேவிட் காமரூன் தலைமையிலான அரசு. இதனை அந்நாட்டு மக்களும் அரசியல் தலைவர்கள் பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

பிரிட்டன் அரசின் இந்த புதிய திட்டத்தின் படி அரசு நிதியில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் இஸ்ரேலிய பொருட்களை நிராகரிக்கும் சுதந்திரத்தை இழக்கும். இதை மீறி யாரேனும் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டனின் பிரபல லேபர் கட்சியை சேர்ந்த ஜெரீஎமி கோபரின் இது குறித்து கூறுகையில், இது மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.

Comments are closed.