பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் 300% அதிகரிக்கதுள்ளது – பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள்

0

பாரிஸ் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பிரிட்டனில் வாழும் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 100 இனவாத தாக்குதலையாவதுசந்தித்திருப்பார்கள் என்று பிரிட்டன் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதில் முஸ்லிம்களுக்குஎதிரான வெறுப்பு மற்றும் வகுப்புவாத தாக்குதல்கள் 300% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு வாரத்தில்மட்டுமே 115 தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துள்ளன. இது போன்ற தாக்குதல்களில் பெரும்பான்மையாகபாதிக்கப்படுவது 14 முதல் 45 வயது வரையுள்ள இஸ்லாமிய பெண்கள் என்றும் அது தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில்ஈடுபடுபவர்கள் 15 முதல் 35 வயது வரை உள்ள வெள்ளை இன ஆண்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை குறைவானது தான் என்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறையிடம்புகாரளிக்க கூடப் பயந்த நிலையில் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. இது போன்ற தாக்குதல் பெரும்பாலும்பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொது இடங்களிலேயே நடக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் ஹிஜாப்அணிந்த முஸ்லிம் பெண்கள், பேர் குழந்தைகள். ஆனால் இது போன்ற தாக்குதலுக்குப் பெரும்பான்மையாக பலியாவதுமுஸ்லிம் பெண்களே என்று அது கூறியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில் , ” தங்களின் ஆதரவுக்காக யாரும் வருவதில்லை என்றும், அவர்கள்தனிமைப்படுத்தப்பட்டு அவமானப் படுத்தப்படுவதாகவும் தங்களுக்கு எதிராக நடப்பவை குறித்து கோபம் கொள்வதாகவும்கூரியுக்ள்ளனர். மேலும் பலர் தாங்கள் வெளியில் செல்வதே தவிர்க்கப் போவதாகவும் இது போன்ற தாக்குதல்கள் தங்கள்நம்பிக்கையையே சிதைத்துவிட்டன என்றும் கூறியுள்ளனர். பல நிகழ்வுகளில் குழந்தைகளும் தாக்கப்பட்டுன்னர் என்றும்அவர்கள் இதனால் பெரும் அச்சமுறுத்தப்படுவதாகவும் அவர்களின் பெற்றோர் கூறியுள்ளனர். பள்ளிகளிலும் இஸ்லாமியஎதிர்ப்பு தாக்குதல்கள் சிறுவர்களை அச்சமுறுத்துகின்றன என்றும் இதனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப்பள்ளியில் இருந்து நிறுத்தி விடுகின்றனர்.

Comments are closed.