பிரித்தானிய முஸ்லிம் குடும்பம் அமெரிக்க விமானத்தில் பயணிக்க தடை

1

விடுமுறையை குழந்தைகளுக்கு விருப்பமான முறையில் கழிப்பதற்காக பிரித்தானிய முஸ்லிம் குடும்பம் ஒன்று தங்கள் குழந்தைகளுடன் டிஸ்னீ லேண்ட் பயணம் மேற்கொள்ள இருந்தனர். அவர்கள் லாஸ் ஏஞ்சலஸ் செல்ல இருக்கும் விமானத்தில் ஏற இருக்கும் போது காட்விக் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தாங்கள் ஏன் தடுத்து வைக்கப்படுகிறோம் என்ற காரணம் கேட்டதற்கு விமான நிலைய அதிகாரிகள் எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை. இந்த சம்பவம் பிரித்தானிய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பிரித்தானிய பிரமர் டேவிட் காமரூன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பிரித்தானிய அமைச்சர் ஒருவர் வலியுறுத்தி வருகிறார்.

முஹம்மத் தாரிக் மஹ்மூத் என்பவர் அவரது சகோதரர் மற்றும் அவரின் ஒன்பது குழந்தைகளுடன் டிஸ்னீ லேண்ட் செல்ல இருந்தனர். இது குறித்து முஹம்மத் தாரிக் கூறுகையில், “அமேரிக்கா மீது நடத்தப்படும் தாக்குதலினால் அனைத்து முஸ்லிம்களையும் அவர்கள் அச்சுறுத்தலாக கருதுகின்றனர். மேலும் நாங்கள் விமானத்தில் ஏறுவதை விட்டு தடுக்கப்பட்டாலும் கூட நாங்கள் செல்ல இருந்த விமான நிறுவனம் எங்களது விமான பயண தொகையான 13,340 அமரிக்க டாலர்களை திருப்பி தர மறுக்கின்றது. நாங்கள் விமான நிலையத்தின் டூட்டி ஃபிரீ அங்காடிகளில் வாங்கிய பொருட்களையும் எங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு திரும்பத் தர மறுக்கின்றனர் என்று பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இதே போல் என் வாழ்வில் நான் என்று அவமானப்பட்டதில்லை, நான் அங்கு பணி புரிகிறேன், என்னுடைய வியாபாரம் அங்கு இருகின்றது, ஆனாலும் நாங்கள் அங்கு தனிமை படுத்தப்பட்டோம் என்று கூறியுள்ளார்.
பிரிட்டனின் எதிர்க்கட்சி எம்.பி. யான ஸ்டெல்லா கிரீசி இது குறித்து கூறுகையில் பிரித்தானிய முஸ்லிம்கள் அமெரிக்கா செல்வதை விட்டும் தகுந்த காரணங்கள் ஏதும் இல்லாமல் தடுக்கபடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் நான் கேள்வி எழுப்பிய பொழுது எந்த பதிலும் தரப்படுவது இல்லை, இதனால் பிரதமர் காமரூன் இந்த விஷயத்தில் தலையிட கேட்டுக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “இது போன்ற கேள்விகளுக்கு பதிலேதும் கொடுக்கப்படாமல் ஏற்படும் வெற்றிடம் மனகசப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்திலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒருவரான டொனால்ட் டிரம்ப் முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என்கிற திட்டத்தையே முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.