பிரைவஸிக்கு ஆபத்து!

0

ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதை ஆதரித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்த கருத்துகள், குடிமக்களின் உரிமைகள் விஷயத்தில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் மிகவும் ஆபத்தான, ஃபாசிச அணுகுமுறையை தோலுரித்து காட்டுகிறது.

ஆதார் திட்டம் மூலம் திரட்டப்படும் ‘தனியுரிமை’ (பிரைவஸி) விபரம்’ அரசுக்கு தடையற்ற அதிகாரத்தை வழங்கும். எனவே, ஆதார் திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஷ்யாம் திவான் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோஹத்கி, “குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது, அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாது. குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பது அடிப்படை உரிமைகளின் கீழ் வராது. ஆதார் திட்டத்தின்படி குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதைக் குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த அரை நூற்றாண்டில் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் தனியுரிமை விபரம் குறித்து இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் மாறியுள்ள முற்போக்கான பார்வைகளையெல்லாம் மறந்துவிட்டு பழமைவாத சிந்தனையுடன் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. பிரபலமான மேனகா காந்தி வழக்கில் தனி நபரின் அந்தரங்கத்தில் அரசு ஊடுருவுவதன் எதிர் விளைவுகளைக் குறித்து ஏற்öகனவே உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆதார் அட்டை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் வந்தபோதெல்லாம் அதனை ஒரு கட்டாய ஆவணமாக நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. அத்தியாவசிய தேவைகளை அளிப்பதற்கு பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் ஆதார் அட்டையை கட்டாயம் வேண்டும் என வலியுறுத்தக்கூடாது என உத்தரவிட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஆதார் என்ற சிறப்பு அடையாள அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டபோது அதனை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க. தற்போது அதனை நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, ஆதார் அட்டை தனிநபரின் தனியுரிமை விபரங்களை களவாடுவதற்கான உபகரணம் மட்டுமே என்று இத்திட்டத்தின் துவக்கத்திலேயே எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் வகையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஜனநாயக  குடிமக்களின் உரிமைகளுக்கு புதிய விளக்கம் அளிக்கிறது.

நமது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு வழங்கும் உயிர் வாழ்வதற்கான உரிமையிலேயே தனி நபரின் தனியுரிமையும் (அந்தரங்கமும்) அடங்கியுள்ளது என்றே நாம் இதுவரை நம்பினோம். அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருத்துகளை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குடிமக்களின் தனியுரிமை விபரங்களை அரசு தேவைப்பட்டால் களவாடலாம் என்பது ஜனநயாக கலாச்சாரத்தின் மீது விழும் மரண அடியாகும்.

ஆதார் என்பது வெறுமொரு அட்டை அல்ல. தனி நபர் தொடர்பான அனைத்து விபரங்களையும் சேகரித்து பாதுகாக்கும் 12 இலக்கங்களை கொண்ட எண்ணாகும். குடிமக்களை கண்காணிப்பதற்கு

அரசின் கையில் உபகரணமாக இந்த எண் மாறுவதன் மூலம் அரசின் முன்னால் நமது தனியுரிமை அடமானம் வைக்கப்படும். குடிமக்களை தீவிரவாதிகளாகவும், ஆபத்தானவர்களாகவும் கருதி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் போது தனி மனித அந்தரங்கங்கள் முழுவதும் வெளிப்படையானதாக மாறும்.

முக்கியமான அரசியல் சாசன உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள இவ்வழக்கினை கூடுதல் நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஆழமாக பரிசோதித்து தனி நபரின் தனியுரிமை சுதந்திரத்தில் ஊடுருவ முயலும் அரசுக்கு கடிவாளம் போட வேண்டும். இல்லையெனில் ஒரு எழுத்தாளர் அண்மையில் கூறியதுபோல, ‘ஜனநாயகத்தின் காலம் வெகுவிரைவிலேயே அஸ்தமிப்பதை நாம் காண நேரிடும்.”

(ஆகஸ்ட் 2015 இதழின் தலையங்கம்)

Comments are closed.