பிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு!

0

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த பிர்லா சூர்யா நிறுவனம் ரூ.67 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கொல்கத்தா யுகோ வங்கி தெரிவித்துள்ளது.

யுகோ வங்கி ராமேஸ்வர் தாஸ் பிர்லாவின் சகோதரர் ஜி.டி. பிர்லா என்பவரால் நிறுவப்பட்டது, அவர் யஷ் பிர்லாவின் முன்னோர். யாஷ் பிர்லாவின் பெற்றோர்கள் விமான விபத்தில் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

இந்த நிலையில் யஷ் பிர்லா ரூ.67 கோடி கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து யாஷ் பிர்லாவின் நிறுவனத்துக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் தெரிவிக்கவில்லை.

இதனால் யுகோ வங்கியின் தலைமை, யஷ் பிர்லா வேனண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர் என்று அறிவித்தது.

கடன் வழங்கிய நிறுவனம், கடன் வாங்கிய நிறுவனத்திடம் வேண்டுமென்றே பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாக அறிவித்துவிட்டால், அந்த நபரின் தற்போதைய தொழில் மட்டுமின்றி அவர் சம்பந்தப்பட்ட அனைத்து தொழிலுக்கும் கடன் வழங்கப்படமாட்டாது.

Comments are closed.