குஜராத்2002:பல்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதி மன்றம்

0

2002 குஜராத் கலவரத்தின் போது பல்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 14 நபர்களை படுகொலை செய்த 11 குற்றவாளிகளின் தண்டனையை பாம்பே உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை சிறையில் இருந்த காலமும் அவர்களது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படும் என்றும் ஆனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் குற்றத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 11 குற்றவாளிகளுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கின் குற்றவாளிகள் செய்த குற்றம் அரிதிலும் அரிது என்றும் அவர்கள் புரிந்த குற்றத்தினை கருத்தில் கொண்டு குற்றவாளிகளில் மூவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை உயர் நீதிமன்றம் நீராகரித்துவிட்டது.

சி.பி.ஐ தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹிடேன் வெநேகோங்கர், இந்த வழக்கு கூட்டுப் படுகொலை வழக்கு என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் உட்பட 14 பேர் இவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அப்போது நடைபெற்ற குஜாராத் கலவரத்தில் இருந்து தப்பிச் சென்ற இவர்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுளளனர் என்றும் அதனால் இந்த வழக்கை அரிதிலும் அரிதாக கருதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹர்ஷத் போண்டா, இந்த சம்பவங்கள் குறித்து பல்கிஸ் பானு விவரித்த வரிசையில் குளறுபடி உள்ளது என்றும் இது தொடர்பாக குஜராத் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் இறந்தவர்களின் புகைப்படங்கள் உட்பட பிற ஆதாரங்கள் இந்த வரிசைக்கு மாற்றமாக உள்ளது என்று கூறினார். இவ்வழக்கில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்ற பல்கிஸ் பானுவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Comments are closed.