பில்கீஸ் பானு: பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தளராத போராளி!

0

பில்கீஸ் பானு: பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தளராத போராளி!

பில்கீஸ் யஃகூப் ரசூல் என்ற பில்கீஸ் பானு, இந்தியாவில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையின் வாழும் சாட்சியாக திகழ்பவர். தனது குடும்பத்தினரை 14 பேரை கூட்டுப்படுகொலைச் செய்து தனது மானத்தை பறித்த பாசிஸ்டுகளுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்றுள்ள பில்கீஸ் பானு சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். 17 வருடங்களாக தொடரும் சட்டப்போராட்டத்தின் பாதையில் அவர் சந்தித்த அச்சுறுத்தல்களும், அழுத்தங்களும், தடைகளும், தலையீடுகளும் அவரை நிராசையில் ஆழ்த்தவில்லை. இறுதியாக உச்ச நீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக 50 இலட்சம் ரூபாய், தங்க இடம், ஒரு வேலை ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு குஜராத் மோடி அரசு தலைமையேற்று நடத்திய கொடூரமான இனப்படுகொலையை மீண்டும் ஒரு முறை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அவரது மூன்று வயது மகளின் தலையில் கல்லால் அடித்து கொலைச் செய்தனர் பாசிச பயங்கரவாதிகள். பில்கீஸ் பானு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இறுதியாக பாசிஸ்டுகள் அங்கிருந்து வெளியேறும்போது பில்கீஸ் பானு இறந்திருப்பார் என்று கருதியிருக்கக்கூடும். ஆனால், தனக்கு இழைக்கப்பட்ட கொடிய அநீதிக்கு எதிராக கேள்வி எழுப்ப அவர் உயிரோடுதான் இருந்தார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பில்கீஸ் பானு அனுபவித்த கொடூரங்களுக்கு உரிய பரிகாரம் அல்ல. ஆனால், அரச பயங்கரவாதத்தை நோக்கி நாட்டின் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது என்ற பொருளில் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதே.

அமைதியை விரும்புபவர்களுக்கு இத்தீர்ப்பு ஆறுதலை அளிக்கக்கூடும். இழப்பீட்டுத் தொகையின் பெரும்பகுதியை தன்னைப் போல வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக செலவழிக்கப் போவதாக பில்கீஸ் பானு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு பில்கீஸ் பானுவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. இவ்வழக்கின் துவக்கத்திலிருந்தே குற்றவாளிகளை பாதுகாக்கவும், வழக்கை சீர்குலைக்கவும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் நடத்திய முயற்சிகள் வெளிப்படையானது. அனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரிகளும், மருத்துவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும்போது குஜராத் அரசு அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டது. உச்ச நீதிமன்றத்தின் வலுவான தலையீட்டின் காரணமாகவே குஜராத் அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தது.

வழக்கின் பழைய கோப்புகளை புரட்டும் எவரும் வழக்கை சீர்குலைக்கும் முயற்சியின் கீழ்த்தரமான அத்தியாங்களை காண முடியும். பில்கீஸ் பானு அளித்த புகாரின் மீது காவல்துறை ஒரு வருட காலம் நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதியாக வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதாகக் கூறி காவல்துறை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் வழக்கில் விசாரணை நடத்த காவல்துறைக்கு கட்டாய சூழல் ஏற்பட்ட போதும் விசாரணை ஆமை வேகத்திலேயே நகர்ந்தது. அதனால் பில்கீஸ் பானு மனித உரிமை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.