மாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு!

0

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஃபைசான் என்றவர் கடந்த சில தினங்களுக்கு முன் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட பசு குண்டர்கள், ஃபைசானை கடுமையாகத் தாக்கினர்.

இது போன்ற சம்பவம் பரவலாக வடமாநிலங்களில் அறங்கேறி வருகிறது. ஆனால் இந்த சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதால் அதர்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  ஃபைசானனுக்கு ஆதரவளிக்கும் விதமாக, #Beef4life and #WeLoveBeef என்ற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர் . இந்நிலையில் ஃபைசானைத் பசு குண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஃபேஸ்புக்கில் பீப் சாப்பிடும் படத்தை பதிவிட்டு, பாதிக்கப்பட்ட ஃபைசான், சாகுல் ஹமீது, முகமது யூனிஸ் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மூன்று பேர் மீது இரு தரப்பினருக்கிடையே வன்முறையைத் தூண்ட முயற்சி செய்ததகாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.