பீகாரில் ஆட்சி மாற்றியதும் தன் வேலையை காட்டும் பசு குண்டர்கள்

0

பீகாரில் பாஜக உடனனான கூட்டணி ஆட்சியை நிதிஷ் குமார் அமைத்ததும் பாஜக மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் பசு பாதுகாவல் என்கிற பெயரில் மக்களை தாக்கும் செயலில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பீகாரில் மாட்டிறைச்சி கடத்துவதாக கூறப்பட்டு வாகனம் ஒன்றை மறித்து அதில் இருந்த மூவரை பசு பயங்கரவாதிகள் தாக்கியதாக தெரிகிறது. மேலும் சட்ட விரோத மாட்டிறைச்சி கூடம் நடத்தியதாகக் கூறி வாகனத்தில் இருந்த சர்ஃபுதீன் கான் மற்றும் அஜ்முல்லா கான் ஆகியோருடன் இறைச்சி கூடத்தின் உரிமையாளரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி மாதிரிகள் ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1955 பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றற சட்டத்தின் படி பசு மற்றும் எருமையை அறுக்க பீகாரில் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக கூறப்படும் வாகனம் ஒன்றை பாஜக தலைவர்கள் சந்தன் பாண்டே, அங்கிட் பாண்டே, ராகேஷ் திவாரி மற்றும் பங்கஜ் திவாரி ஆகியோரும் பஜ்ரங்தள் குண்டர்களான நிஷு ராவ், கிருஷ்ணா காந்த் சிங் மற்றும் தோணி ஆகியோர் வழிமறித்து அதில் இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

முதலில் இந்த வாகனம் குறித்த தகவல் ஷாபூர் நகர பாஜக பொது செயலாளர் சந்தன் பாண்டே நடத்தும் ”போஜ்பூர் நியுஸ்” என்ற வாட்சப் குழுமம் ஒன்றில் பகிரப்பட்டதாகவும் இந்த குழுமத்தில் அப்பகுதி காவல்துறை அதிகாரி பிபின் குமாரும் ஒரு உறுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த புதன் கிழமை இந்த குழுமத்தில் மேற்கு வங்கம் நோக்கி செல்லும் ஒரு வாகனம் ராணிசாகர் பகுதி வழியாக செல்லுகிறது என்று செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது. பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் சுமார் 15 பேர் கொண்ட பாஜக மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் இந்த வாகனத்தை மறித்துள்ளதாகவும் அதனை தொடர்ந்த இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பீகாரின் ஷாபூர் பாஜக மாநில கமிட்டி உறுப்பினர் பவார் ஒஜ்ஹா, பீகாரில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சிக் கூடங்கள் செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து காவல்துறைக்கு பல முறை தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த காரணத்தினால் தங்களுக்கு புது உற்ச்சாகம் பிறந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் அதிகாமாக வசிக்கக்கூடிய ராணிசாகர் மற்றும் பாகாய் பகுதிகள் தான் பிரச்சனைக்குரிய பகுதிகள் என்று தெரிவித்துள்ள அவர் பாஜக தலைமை தன்னிடம் எந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் தாங்கள் எந்த போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை என்றும் தங்களுடைய கூட்டணி ஆட்சி நடப்பதால் அதற்கு எதிராகவே தாங்கள் போராட்டம் செய்வது கூடாது என்றும் இம்முறை காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்தன் பாண்டேயிடம் கேள்வி எழுப்பியதற்கு தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் தாங்கள் 10-12 டன் மாட்டிறைச்சி கடத்தியை ஒப்புக்கொள்வதாக கூறும் ஒரு வீடியோ ஒன்றையு அவர் காட்டியுள்ளார்.

மேலும் தாங்கள் அவர்களை தாக்கியதாக கூறுவதும் வெறும் குற்றச்சாட்டு தான் என்றும் தாக்கபப்ட்டதாக கூறப்படுபவர்கள் கூட தங்கள் மேல் எந்த ஒரு வழக்கையும் காவல்துறையிடம் பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக தலைவர் புவர் ஜா விற்கு தெரியப்படுத்திக் கொண்டே இருந்ததாகவும் சந்தன் தெரிவித்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து ராணிசாகர் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களுக்காக நிருத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.