பீகாரில் உள்ள ஓட்டலில் வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு!

0

பீகாரின் முசாஃபர்பூர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7 மாநிலங்களிலுள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கு 5ஆம் கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில் முசாஃபர்பூர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓட்டலிலிருந்து 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 2 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் ஆலோக் ரன்ஜன் கோஷ் விசாரணை நடத்திய பிறகு தெரிவித்ததாவது:
“வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகும் பட்சத்தில், அதற்கு மாற்றாக பயன்படுத்துவதற்கு வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் அவை எனத் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக இவை ஒரு ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்ததற்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அந்தந்த துறை மூலமாக விசாரணை நடைபெறும் என்று முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் ஆலோக் ரன்ஜன் கோஷ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.