பீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்!

0

பீகாரில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பாண்டே. குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவது குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தியா, பாகிஸ்தான் கிரிககெட் போட்யும்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

குழந்தைகள் இறப்பு குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது , திடீரென அமைச்சர் மங்கள் பாண்டே அங்கு இருந்தவர்களிடம் “எத்தனை விக்கெட் விழுந்தது” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருவர் “நான்கு விக்கெட் விழுந்துவிட்டதாக” பதிலும் அளித்தார்.

இதுவரை பீகாரில் 104 குழந்தைகள் இறந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து முறையான நடவடிக்கை இல்லை எனவும், போதுமான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஒருவரே இப்படி நடந்து கொண்டது அனைவரைக்கும் கோபத்தை உண்டாக்கும் விதமாக உள்ளது.

Comments are closed.