பீகார்: கூட்டணி முறிவிற்கு பின் அதிகரித்த கலவரங்கள்

0

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையேயான கூட்டணி முறிந்த பிறகு அம்மாநிலத்தில் வகுப்பு கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி 2010 முதல் மூன்றரை வருடங்கள் இரு கட்சிகளும் ஒன்றாக இருந்த போது மாநிலம் முழுவதும் 226 வகுப்புவாத பிரச்சனைகள் நடைபெற்றுள்ளன.
ஆனால் ஜூன் 2013ற்கு பிறகு இந்த எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அங்கு 667 வகுப்புவாத பிரச்சனைகள் நடைபெற்றுள்ளதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. 38 மாவட்டங்களின் காவல்துறை அறிக்கைகள் அடிப்படையிலும் 18 மாவாட்டங்களில் நடத்தப்பட்ட நேரடி கள ஆய்வின் அடிப்படையிலும் இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத போதும் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் கலவரங்களை ஆயுதமாக பயன்படுத்தும் என்ற நீண்ட கால குற்றச்சாட்டிற்கு வலுசேர்ப்பதாக இந்த ஆய்வுகள் அமைந்துள்ளன. சில மாதங்களுக்கு முன் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு முன்னர், தேர்தல் நடைபெற இருந்த பகுதிகளில் வகுப்பு கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அப்போது நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன.
விரைவாக தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் பா.ஜ.க. தனது வழக்கமான வழியை தேர்ந்தெடுத்துள்ளதையே இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

Comments are closed.