பீகார் தேர்தலில் தமிழகத்திற்கான பாடங்கள்

0

பீகார் தேர்தலில் தமிழகத்திற்கான பாடங்கள்

கொரோனா நோய் தொற்று ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் அச்சத்திற்கு பின், அல்லது அச்சத்திலேயே முதல் சட்டமன்ற தேர்தல் பீகாரில் நடத்தப்பட்டது. 15 ஆண்டுகள் (இடையில் எட்டு மாதங்கள் தவிர்த்து) ஆட்சியில் இருந்த நிதிஷ் குமார், குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக கூட்டணிகள் மாறினாலும் முதல்வர் பதவியை தக்கவைக்கும் தந்திரத்தை அறிந்துள்ள நிதிஷ்,  கொள்கைகளை ஓரமாக வைத்து பல வருடங்கள் ஆகிறது. தேசிய அரசியலில் முதல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஜெயபிரகாஷ் நாராயணனின் சோசியலிசத்தில் உருவானவர்களில் பலர் இந்துத்துவத்தின் ஆதரவாளர்களாகவும் கூட்டணி கட்சியினராகவும் மாறிவிட்டனர். நிதிஷ் குமாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அதே சோசியலிச அணியில் உருவான லாலு பிரசாத் யாதவ் மட்டும்தான் இதுவரை பாசிச பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காதவராக உள்ளார். பா.ஜ.க.வுடன் இதுவரை கூட்டணி வைக்காத ஒரே மாநில கட்சி அவரின் ராஷ்டிரிய ஜனதா தளம்தான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.