பீஹார் அஜீஸ்பூர் கலவரம்-நேரடி ரிப்போர்ட்

0

 – வழக்கறிஞர் யூசுப்
(தேசிய செயலாளர், NCHRO)

“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதைபோல, “தேர்தல் வரும் பின்னே, கலவரம் வரும் முன்னே” என்ற ரீதியில் மத வெறியைத் தூண்டி அரசியல் குளிர் காயும் சங்பரிவார்களின் சதியின் ஒரு பகுதியாகத்தான், கடந்த ஜனவரி 18ம் தேதி பீஹார் மாநிலம் முஸஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள அஜீஸ்பூர் கிராமத்தில் நடந்தது கலவரம்.

2013  முஸஃபர் நகர்

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்திரப்பிரதேசத்தில் அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், ‘லவ் ஜிஹாத்’ என்ற பொய்ப்பிரச்சாரத்தை பரப்பி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முஸஃபர் நகரில் மதக்கலவரத்தை உருவாக்கினர் சங்பரிவார்கள்.

ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் ஒன்று திரண்டு வந்து கிராமம் கிராமமாக முஸ்லிம்களை தாக்கி விரட்டியடித்தனர். சுமார் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயினர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்றுவரை அகதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்தக் கலவர யுக்தி சிறிது மாற்றம் செய்யப்பட்டு தற்போது பீஹார் மாநிஙுலம்அஜீஸ்பூரில் சங்பரிவார்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2015  அஜீஸ்பூர்

பீஹார் மாநில தலைநகர் பாட்னாவிலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது முஸஃபர்பூர் மாவட்டம். இதில் ஒரு கிராமம் தான் அஜீஸ்பூர். கலவரத்தை நடத்த சங்பரிவார்கள் கட்டிவிட்ட கதை இதுதான்:

அந்தக் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்த நான்கைந்து பேர்கள் அடங்கிய ஒரு டீன் ஏஜ் நண்பர்கள் குழு இருந்தது. அதில் சதகத் (எ) விக்கியின் சகோதரியை, நண்பர் பாரத் இந்து காதலித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த விக்கியின் குடும்பத்தினர் பாரத் இந்துவை கடத்திக் கொன்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

விக்கியின் தந்தை வசி அஹமது, பாரத் இந்துவின் தந்தை கமல் கஹானி.

பாரத் இந்து அஜீஸ்பூருக்கு அருகில் 2 கி.மீ  தொலைவில் உள்ள பாஹில்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர்.

திட்டமிடப்பட்ட ரீதியில் பரப்புரை

கடந்த ஜனவரி 8ம் தேதி வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற பாரத் இந்து 9ம் தேதி கடத்தப்பட்டதாக கமல் கஹானி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார். தனது மகனை முஸ்லிம்கள், அதாவது விக்கி குடும்பத்தினர்தான் கடத்தியதாக கமல் கஹானி பரப்புரை செய்கிறார்.

கலவரம் நடந்த 18ம் தேதிக்கு சில தினங்கள் முன்பிருந்தே கிராமத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு மிரட்டல்கள் வரத் துவங்கின. பலசரக்கு கடைக்கு சாமான் வாங்கச் செல்லும் பெண்கள், வயல் வெளியிலிருந்து செல்லும் பெண்கள் ஆகியோரை வழிமறித்து சங்பரிவார்கள், “ஒழுங்காக பாரத் இந்துவை திரும்ப தந்து விடச் சொல். இல்லையேல் உங்கள் கதி அதோ கதிதான்” என மிரட்டியுள்ளனர்.

ஆனால், பாரத் இந்து கடத்தப்பட்டதற்கு வசி அஹமது குடும்பத்தினர்தான் காரணம் என எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை.2

சதித்திட்டம்

கலவரத்திற்கு முந்தைய தினம் ஜனவரி 17ம் தேதி அப்பகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் நெருங்கிய நண்பரான பஜ்ரங்தள தலைவர் ராம் பிரவேஷ் கஹானி தனது வீட்டில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும், அதில் 100 பேர் வரை கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி 18

மறுநாள் காலை அஜீஸ்பூர் கிராமத்தில் ஒரு தோண்டப்பட்ட குழியில் ஒரு பிணம் இருப்பதாகவும், அதன் கை வெளியே இருந்ததாகவும், பாரத் இந்துதான் கொன்று புதைக்கப்பட்டுள்ளார் என்றும் பரப்பப்படுகிறது.

ஆனால், அதனைப் பார்த்ததாக ஒரு நேரடி சõட்சியும் (உதூஞு ஙிடிtணஞுண்ண்) இல்லை. ஒரு சிறிய கிராமத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கும் போது அதனை பார்த்த எவரும் இல்லை என்று கூறுவது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

5,000 பேர் ஆயுதங்களுடன்

தகவல் வெளியான அரை மணி நேரத்தில், சுமார் 11 மணியளவில் ஒரே ஜாதியைச் சேர்ந்த 5,000 பேர் ஆயுதங்களுடன் அஜீஸ்பூர் கிராமத்திற்குள் புகுந்து முஸ்லிம்களைத் தாக்க ஆரம்பித்தனர்.

பெண்களும் ஆயுதம் ஏந்தி இந்த கலவரக் கும்பலில் வந்ததாக முஸ்லிம்கள் கூறினர். 6

கொலை, கொள்ளை!

அஜீஸ்பூர் கிராமத்தைப் பொறுத்தமட்டில் மிகவும் ஏழ்மையான முஸ்லிம்களும் உள்ளனர்; ஓரளவு பண வசதி படைத்த முஸ்லிம்களும் உள்ளனர்.

60 வயது முதியவர் அக்தர் அலி மற்றும் 20 வயது இளைஞர் சம்ஷýல் முஸ்தஃபா கரமுன்னா ஆகிய இருவரும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

60 வயது முதியவர் முஹம்மது அல்தாஃப் மற்றும் 16 வயது இளைஞன் குலாம் ஜீலானி (எ) முஹம்மது பியாரே ஆகிய இருவரும் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டு, அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

விக்கி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதால், பொய் வழக்கிற்கு பயந்து வசீ அஹமதுவின் மொத்த குடும்பமும் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டது.

ஒரு குழந்தை உட்பட 15 ஆண்களும், 10 பெண்களும் சங்பரிவார்களின் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

33 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 4 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த 4 வீடுகளுக்கும் தீ வைக்காமல் இருந்ததற்குக் காரணம், இவற்றின் அருகில் இருந்தவை இந்துக்களின் வீடுகள். இவற்றில் தீ வைத்தால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தீ வைக்காமல் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்துக்களின் வீடுகள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அப்படியென்றால், அடையாளம் பார்த்து நன்கு திட்டமிட்ட கலவரம் இது என தெளிவாகின்றது.

கலவரத்தில் ஈடுபடும்போது சங்பரிவார் “மியான் லோகோன்கோ காட்டோ மாரோ ஜலாதோ”. முஸ்லிம்களை வெட்டுங்கள்; அடித்துத் துவையுங்கங்கள்; எறித்துக் கொள்ளுங்கள் என்று முழக்க)மிட்டுக் கொண்டே தாக்கியுள்ளனர். வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டத்தில் அனைத்து சõமான்களும் எரிந்து சாம்பலாயின. செங்கலும் சுவருமே மிஞ்சியது.

தீ வைப்பில் 100% சேதமடைந்த வீடுகள் 24       

90% சேதமடைந்த வீடுகள்     1       

80% சேதமடைந்த வீடுகள்   5          

75% சேதமடைந்த வீடுகள்   2          

70% சேதமடைந்த வீடுகள்    1          

60% சேதமடைந்த வீடுகள்    2          

தீவைக்காமல்அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள் 2   

நகை, பணம் கொள்ளை

இந்த முறை கலவரத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய நோக்கம் உயிர் சேதத்தைவிட, பொருளாதார சேதத்தை, அதாவது வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கமாகவே இருந்துள்ளது.

வீடுகளை தீயிட்டுக் கொளுத்தும் முன்பு, அனைத்து வீடுகளிலும் இருந்த நகை, பணம் (அணிந்திருந்த நகை உட்பட) ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். இக்கொள்ளையிலும், தீ வைப்பிலும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

குறைந்தபட்சமாக ஒரு வீட்டில் இருந்த தங்க நகையின் மதிப்பு ரூ.15,000/ (4 1/2 கிராம்). அதிபட்சமாக ஒரு வீட்டில் இருந்த தங்க நகையின் மதிப்பு ரூ.1,63,000/ (50 கிராம்)

குறைந்தபட்சமாக ஒரு வீட்டில் இருந்த வெள்ளி நகையின் மதிப்பு ரூ. 2,500/ (25 கிராம்). அதிகபட்சமாக ஒரு வீட்டில் இருந்த வெள்ளி நகையின் மதிப்பு ரூ.50,000/ (1/2 கிலோ)

குறைந்தபட்சமாக ஒரு வீட்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.5,000/ அதிகபட்சமாக ஒரு வீட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ. 1,0,5000/ இதில் ரூ.1,05,000/ முஹம்மது கம்ரே ஆலம் என்பவர் நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த பணம் ஆகும். சில வீடுகளில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.

திருணமத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட நகை, பணத்தை இழந்து நிற்போர்

 1. முஹம்மது சலாம் மகள் ஷமீமா காத்தூண் (வயது 18)
 2. முஹம்மது கமால் மகள் ஷமா காத்தூண் (வயது 22)
 3. முஹம்மது ஹபீப் அன்சாரியின் மகள்
 4. முஹம்மது நிஸõர் மகள் ஷகிலா காத்தூண் (வயது 18)
 5. முஹம்மது ஷம்சுத்தீன் மகள் ஹெனா காத்தூண் (வயது 19)
 6. குலாம் முஸ்தஃபா மகள் ருக்ஸர் பர்வீன் (வயது 18)
 7. முஹம்மது கையூமின் இரு மகள்கள் ரோனக் காத்தூண் (வயது 20), நிகாத் பர்வீன் (வயது 18)

கொள்ளையடிக்கப்பட்ட தானியங்கள், கால்நடைகள்:

இஷ்ரத் காத்தூண் என்பவரது 4 ஆடுகள், முஹம்மது ஷம்சுத்தீன் என்பவரது 6 ஆடுகள் சங்பரிவார்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

முஹம்மது பும்சேர் வீட்டிலிருந்த 10 குவிண்டால் நெல், முஹம்மது நயீம் வீட்டிலிருந்த 2 குவிண்டால் நெல், ஹசீபுல் காத்தூண் வீட்டிலிருந்த 10 குவிண்டால் நெல் ஆகியவற்றில் முடிந்தவரை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மீதி இருந்தவற்றை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள்

சைக்கிள்கள்                                              37

மோட்டார் பைக்                                      25

மாட்டு வண்டி                                            1

ட்ரை சைக்கிள்                                          1

மாருதி ஆட்டோ கார்                             1

மாருதி வேகன் ஆர் கார்                       1

டிராக்டர்                                                       1

நீர் இறைக்கும் மோட்டார் பம்பு       1

பூச்சி மரந்து அடிக்கும் இயந்திரம்  1

தையல் மிஷின்                                      2

கொல்லப்பட்டவர்கள்

 1. அக்தர் அலி (60)
 2. விம்கல் முஸ்தஃபா (எ) முன்னா (20)
 3. குலாம் ஜீலானி (எ) முஹம்மது பியாரே (16)
 4. முஹம்மது அல்தாஃப் (60)

காயமடைந்தவர்கள்

 1. முஹம்மது ஜஹுர் (62)
 2. நஜ்முன் காத்தூண் (70)
 3. முஹம்மது ஷாநவாஸ் (15)
 4. ஜொஹ்ரா காத்தூண் (55)
 5. முஹம்மது ஃபிரோஸ் ஆலம் (27)
 6. அவரது மனைவி ஷப்னம் காத்தூண் (24)
 7. ஜஹிதா காத்தூண் (35) (கொல்லப்பட்ட குலாம் ஜீலானியின் தாயார்)
 8. ஆம்னா காத்தூண் (50)
 9. முஹம்மது ஷமீம் இவர் கொல்லப்பட்ட அக்தர் அலியின் மகன்
 10. முஹம்மது குர்பான் (70)
 11. முஹம்மது ரிஹான் (2 1/2 வயது குழந்தை)
 12. முஹம்மது ஷஃபிக் (90)
 13. இவரது பேரன் முஹம்மது ஜஹாங்கீர் (18)
 14. ஹமீதா காத்தூண் (22)
 15. ஷஹிதா காத்தூண் (35)
 16. அப்துல் ரஜாக் (70)
 17. ஹசீபுல் காத்தூண் (45)
 18. இவரது மகன்கள் முஹம்மது ஜாவேத் (24)
 19. இவரது மகன்கள் முஹம்மது    இம்தியாஸ் (14)
 20. இவரது மகன்கள் முஹம்மது தன்வீர் (15)
 21. இவரது மகள்கள் ஹசிலா காத்தூண் (18)
 22. இவரது மகள்கள் சஃபினா காத்தூண் (13)
 23. முஹம்மது ஷாஹித் (15)
 24. முஹம்மது சபீர்
 25. முஹம்மது நயீம்

110 குடும்பங்கள்

ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து குடும்பங்கள் வசிக்கின்றன. அத்தனை பெரிய வீடுகள் அவை. எரிக்கப்பட்ட 35 வீடுகள் மற்றும் சேதமாக்கப்பட்ட 4 வீடுகளில் வசிக்கும் 110 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 486 பேர் இக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஊனமுற்ற தம்பதியரும் அடங்குவர்.

முஸ்லிம் சப் இன்ஸ்பெக்டர்கள்

கலவரம் நடைபெற்ற அஜீஸ்பூர் கிராமம் சரய்யா என்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்டது. சில கிலோ மீட்டர் தூரமே உள்ள இந்த காவல்நிலையத்திலிருந்து சுமார் 2 மணி நேரம் கழித்தே போலீஸ் படை வந்துள்ளது.

ஆனால், விஷயத்தைக் கேள்விப்பட்ட பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த (தாடு காவல் நிலையம்) முஸ்லிம் சப்இன்ஸ்பெக்டர் முஹம்மது ஷஃபீர் அலி என்பவர் தனது கட்டுப்பாட்டில் இருந்த போலீஸ் படையோடு அரைமணி நேரத்தில் அங்கு வந்து முடிந்த அளவு சேதத்தை தடுத்துள்ளõர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் குறைந்தது ஒரு சப்இன்ஸ்பெக்டர் ரேங்கிலாவது ஒரு முஸ்லிம் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என நீதிபதி சச்சார் பரிந்துரைத்தது ஏன் என்று இப்போதாவது அரசுக்கு உரைக்கின்றதா? என்று பார்ப்போம்.

பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கூறுகின்றது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஏனென்றால், காவல்துறையால் கைது செய்யப்பட்ட இரு உள்ளூர் சங்பரிவார தலைவர்களில் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பித்து விட்டதாக அப்பகுதி நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. காவல்துறையின் தரப்பை உறுதி செய்ய முடியவில்லை.

ருசி கண்ட பூணை

புதுமாதிரியாக நடத்தப்பட்ட இக்கலவரத்தில் சங்பரிவார்கள் ஆயிரக்கணக்கில் கும்பலாக வந்து முஸ்லிம்களின் வாழ்வாதாரங்களை நசுக்கி, அங்கிருந்த நகை, பணம், கால்நடைகள், தானியங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

பீஹாரின் ஒரு கிராமத்தில் இது லேசாக வெறுமனே தொட்டு சுவைத்தது மட்டுமே. அடுத்த வருடம் வருகின்ற, சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க சங்பரிவார்கள் நடத்தத் துவங்கியிருக்கும் மதவெறி கலவரத் தொடரில் ருசி காண்ட பூனைகள், இன்னும் என்ன செய்யக் காத்திருக்கின்றனவோ என்பது அந்த இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

25 வருடங்களுக்கும் முன்பு இதே பீஹாரில் நாடாறிந்த மோசமான பாகல்பூர் கலவரத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகளில் சங்பரிவார்கள் யாரும் தண்டிக்கப்பட்டதõக (ஒரு வழக்கு தவிர) நாம் காண முடியவில்லை.

“விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக்கேற்ப, இனியாவது அங்குள்ள முஸ்லிம் சமூகம் விழித்துக் கொண்டால் உயிர் தப்பலாம். பொருளாதாரத்தை பாதுகாக்கலாம்.

களத்தில் எஸ்.டி.பி.ஐ.

கலவரம் நடந்த அஜீஸ்பூர் கிராமத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் ஏ. சயீது, தேசியச் செயலாளர் டாக்டர் மஹ்பூப் ஆவாத் ஷரீஃப், பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் ஆகியோர் கடந்த ஜனவரி 29,30 ஆகிய இரு தினங்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டத் தலைநகரமான முஸஃபர்பூரிலும், மாநிலத் தலைநகரான பாட்னாவிலும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.5

அரசு இழப்பீட்டுத் தொகை

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கியது. காயமடைந்த மற்றும் வீடு சேதமடைந்த குடும்பங்களுக்கு ரூ. 1,04,700/ இழப்பீடு வழங்கியது.

ஆனால், 110 குடும்பங்களில் 42 குடும்பங்களுக்கு இன்னும் அரசின் இழப்பீடு கிடைக்கவில்லை.

இது குறித்து பேட்டியளித்த எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் ஏ. சயீத் அவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 25 இலட்சம் இழப்பீடும் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களின் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கலவரத்தில் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்களை அவர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், அங்கு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சட்ட உதவிக்குழு

பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. சார்பாக சட்ட உதவி வழங்கப்படும் என்று அவர்களிடம் ஏ. சயீத் தெரிவித்ததன் அடிப்படையில், சட்ட உதவிக் குழு அமைக்கப்பட்டு அதற்கான பணி தொடங்கியது.

வழக்கறிஞர் முஹம்மது யூசுப் மேற்பார்வையில் பூனாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சைஃபன் ஷேக், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் முஹம்மது ஷேக், கட்டிஹாரை சேர்ந்த வழக்கறிஞர் தஜம்முல் ஆகியோர் அடங்கிய எஸ்.டி.பி.ஐ. சட்ட உதவிக்குழு மற்றும் பீஹார் மாநில எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் குழுவுடன் சேர்ந்து, கடந்த பிப்ரவரி 7,8,9,10 ஆகிய நான்கு நாட்கள் களப்பணியாற்றியது.3

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் விரிவான வாக்குமூலம் வாங்கி, அதனை முஸஃபர்பூர் மாவட்ட எஸ்.பி., பீஹார் முதலமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகாராக அனுப்பியுள்ளது சட்ட உதவிக்குழு.

பாதிக்கப்பட்டோர் வழங்கும் ஒத்துழைப்பின் அடிப்படையில் அடுத்த சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சட்ட உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் யூசுப் தெரிவித்துள்ளார்.

(மார்ச் 2015 இதழில் வெளிவந்த ரிப்போர்ட்)

Comments are closed.