புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் மீது குற்றவியல் வழக்கு: ஆய்வில் தகவல்!

0

மக்களவைத் தேர்தலில் வெற்று பெற்று புதிதாக தேர்வான 539 எம்.பிக்களில் 233 பேர், அதாவது 43 சதவீதத்தினர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 116 குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்களை பாஜக கொண்டுள்ளது. இதேபோல் காங்கிரஸில் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 29 எம்.பிக்கள் மீது குற்றப்பின்னணியை கொண்டுள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தில் 13 பேரும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 10 பேரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மேலும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாகூர் மீது தீவிரவாத வழக்கு உள்ளது. வெற்றிபெற்ற 29 பேர் மீது  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய புகார் உள்ளது.

Comments are closed.