புதிய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் வாழ்த்து!

0

பிப்ரவரி 16, 2017
சென்னை

பத்திரிகை செய்தி

புதிய முதல்வராக பதவி ஏற்றிருக்கும் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் வாழ்த்து!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின் நடந்த பல அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு தமிழக முதல்வராக இன்று (16-02-2017) மாலை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பதவி ஏற்றிருக்கிறார்.

மிகுந்த சவாலான சூழலில் பதவி ஏற்றுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கூடுதல் பொறுப்பு இருக்கின்றது. வெற்றி பெற வைத்த தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுகொள்கின்றேன்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வாக்களித்த அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்துவதுடன், விலைவாசிகளை கட்டுப்படுத்தி மக்களுக்கான நல்லாட்சியை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம்.முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.