புதிய விடியல் – 2018 அக்டோபர் 01-15

0

தலைப்புகள்

 

வாசகர் கடிதம்

 

தலையங்கம்: ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய தந்திரம்!

 

பாபரி மஸ்ஜித் வழக்கு: மதச் சார்பற்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை உச்சநீதிமன்றம் நிறைவேற்றுமா?

 

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

 

தமிழர் கலாச்சாரத்திற்கு விரோதமான விநாயகர் ஊர்வலங்கள்!

 

காவி மடங்களாகும் கல்விக்கூடங்கள்!

 

கல்வியாளர்களை எதிர்க்கும் பார்ப்பனியம்

 

கேஸ் டைரி

 

சின்ஜியாங்-: வீட்டை அபகரித்து கம்யூனிச பாடம்!

 

சீனா: ஒடுக்கப்படும் உய்கூர் முஸ்லிம்கள்!

 

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கருத்தரங்கம்

 

பாதுகாப்பற்ற தேசம்?

 

பீம் ஆர்மி: சந்திரசேகர் ஆசாத் – பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் சந்திப்பு!

 

வேண்டாம் UAPA

 

அதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி

 

கர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்

 

என் புரட்சி:கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு

 

குர்ஆன் பாடம்: எழுத்திலிருந்து சிந்தனையை நோக்கி

 


 

வாசகர் கடிதம்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் அதிகார அத்து மீறல்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பெருவாரியாக கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுவதை படிக்கும் போது ‘பாசிச பாஜக ஒழிக’ என்று ஓங்கி ஒலிப்பதில் தவறே இல்லை. மக்கள் நலனை மறந்து அரசியல் ஓட்டு வேட்டைக்காக முஸ்லிம்களை சிறையில் அடைப்பது நாட்டுக்கு கேடு.
எஸ். கே. வாலி, திருச்சி.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து விட்டுதான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று விஜய் மல்லையா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திருடன் தப்பிக்க வழிகாட்டி விட்டு, திருடனை தேடுகிறோம் என்று நாடகமாடுவது நாட்டு மக்களை முட்டாளாக்கும் செயல். விஜய் மல்லையாவின் இந்த பேச்சுக்கு பிரதமரின் பதில் என்ன? நிதி அமைச்சரின் மீதான நடவடிக்கை என்ன? மௌனம் சாதிப்பதால் மக்களை ஏமாற்றிவிட முடியாது?
-எம். முஹம்மது கடாஃபி, கொடிக்கால் பாளையம்.

ஏமாற்றுப் பேர் வழிகளின் அரசு – ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மக்களை உசுப்பிவிடுகிறது. பணம் படைத்தவர்களின் கார்பரேட்டுகளின், பாசிச வாதிகளின் அரசாகிய பாஜக அரசு என்ன செய்ய வேண்டும், என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் எதை எதையோ செய்து தனக்கு இருக்கும் போலியான செல்வாக்கை செல்லாக்காசாக்கிக் கொண்டிருக்கிறது. சிறுகடன் வாங்கிய வியாபாரிகள், விவசாயிகள் சிறு கடன்களுக்காக மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் அரசுக்கே சவால் விடக் கூடிய நிலைக்கு நமது மோ(ச)டி அரசு அவர்களை வளர்த்துள்ளது. வராக்கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பட்டியலிட்டது கண்டு கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து மெச்சத்தக்கதாக மாறியிருக்கும். பாஜகவின் முன்னாள் அமைச்சர் அருண் சோரி ரஃபேல் விமான ஒப்பந்த ஊழல், குற்றவியல் துர்நடத்தை, அரசு பதவி துஷ்பிரயோகம் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைத்தல் ஆகியவற்றின் முன்னால் போபர்ஸ் ஊழல் பெரியதல்ல என்கிறார். தார்மீக நெறிகளின் பலத்தை இழந்துள்ள பாஜக எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
-எம். ஹாஜி முகம்மது, நிரவி

இந்துத்துவத்தின் முகமூடி என்ற தலைப்பில் ‘ரைட் மேன் இன் ராங் பார்ட்டி’ என்று பேசப்பட்டவரின் முகமூடியை கிழித்து ‘ராங் மேன் இன் ராங் பார்ட்டி’ என்று விடியலுக்கே உரிய பாணியில் தந்தது அருமை.
-உம்மு கஸ்ஸாம், சென்னை

புதிய விடியலின் தலையங்கம் கார்ப்பரேட் பினாமியாக செயல்படும் பாஜகவின் முகத்திரையை ஆதாரங்களுடன் கிழித்துவிட்டது. மல்லையா முதல் ஒவ்வொரு தொழிலதிபர்களும்(?) பல ஆயிரம் கோடிகளை கடனாக வைத்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடி செல்வதற்கு துணை போவதை நடுநிலையார்கள் வெளிச்சம் போட்டு காட்டிவருகின்றனர்.

UAPA தண்டனைச் சட்டம் அமல்படுத்தியதில் இருந்து அந்த சட்டத்தின் பாதகங்களையும்,மக்களை திரட்டி இந்த சட்டத்திற்கு எதிராக போராடுவதிலும் தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு முன்னணியில் இருக்கிறது.

அதேபோல் ஊடகத்தின் வாயிலாக கொடுஞ்சட்டத்தை வெளிக்கொண்டு வருவதில் புதிய விடியல் இதழ் முன்னணியில் இருக்கிறது.
-முகமது அசாருதீன், மல்லிப்பட்டினம்

ஏமாற்றுப் பேர்வழிகளின் அரசு! தலையங்கத்தின் தலைப்பு மிக மிக அற்புதம். ஊழல் எங்கே? ஹசாரா எங்கே-? மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கு முதல் அடித்தளம் போட்டவர் அண்ணா ஹசாரே அடுத்து பாபா ராம்தேவ் இவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள். தற்போது நாட்டில் நடக்கும் ஊழல்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? பா.ஜ.க. அசுரபலத்தில் வெற்றி பெறுவதற்கு காசு கொடுத்து உதவியவர்களில் விஜய் மல்லையாவும் ஒருவராவார். அதற்கு நன்றி கடனாக தான் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய விஜய் மல்லையாவை நன்றியோடு லண்டனுக்கு வழியனுப்பி வைத்து இருக்கிறார்கள். பா.ஜ.க.காரர்களை பொறுத்தவரையிலும் நாட்டை பற்றியோ நாட்டு மக்களைப் பற்றியோ அவர்களுக்கு கவலை கிடையாது. ஏனென்றால் வெள்ளையனுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் சங்கபரிவார்கள்.
-உ. முஹம்மது அபூதாகிர், கம்பம்

Goto Index


Comments are closed.