புதிய விடியல் – 2019 அக்டோபர் 16-31

0

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டங்களுக்கு அடிபணிகிறதா நீதிமன்றம்?

‘‘சில நபர்களால் மட்டும் கையாளப்படக்கூடியதல்ல அதிகாரம். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது அதனை தடுப்பதற்கான ஆற்றலை அனைவரும் பெறுவதே உண்மையான சுயராஜ்ஜியம்” – உலகிற்கு இந்த தத்துவத்தை கற்றுக்கொடுத்த காந்தியடிகளின் 150-ஆம் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முந்தைய தினத்தில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு குடிமக்களின் சுதந்திரம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தினை தெரிவித்தது. ஜம்மு-கஷ்மீரில் ஊடகங்களுக்கும், தகவல்-தொடர்புகளுக்கும் தடை விதித்த அரசின் நடவடிக்கையை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணையின்போது நீதிபதி பி.ஆர்.கவாய் இவ்வாறு கூறினார், ‘‘தனி நபர் சுதந்திரம் என்பது தேசப்பாதுகாப்பை சார்ந்திருக்கிறது. தனி நபர் சுதந்திரமும், 

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த போராட்டத்தால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்!

“நமது அரசியல் சாசன உரிமைகளையும், நாட்டின் பன்மைத்துவ கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக நாட்டை சூழ்ந்துள்ள வெறுப்பு மற்றும் அச்சத்தின் அச்சுறுத்தலை, பாசிசத்திற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தால் மட்டுமே தடுக்க முடியும். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடிந்தால், பாசிச சக்திகளை சமாதானப்படுத்துவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று கனவு காணும் அளவுக்கு நாம் முட்டாள்தனமாக இருக்கக்கூடாது. வகுப்புவாத பாசிசத்திற்கு எதிரான சக்திகளுடன் கூட்டணிகளை உருவாக்குவது வரலாற்றில் நமது தலைமுறை மேற்கொண்ட அறிவார்ந்த லட்சிய பணியாக பதிவு செய்யப்படும்”.

மேலும் படிக்க

திருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ

சென்ற இதழ் தொடர்ச்சி)

மீறப்படும் மனித உரிமைகள்

எந்தவொரு காரணத் தாலும் சிறைக்கைதிகள் பரஸ்பரம் சந்திப்பதற்கும், பழகுவதற்குமான சூழலை இல்லாமலாக்குவதே தீவிர பாதுகாப்பு சிறைகள் அடிப்படையாக செய்யக்கூடியவையாகும். இதற்காக தனிமைச்சிறையில் அடைக்கும் செப்டிக் டேங்க் சித்தாந்தத்தை திருச்சூர் தீவிர பாதுகாப்பு சிறையிலும் பிரயோகிக்க இருக்கின்றனர். சிறை அறைகளிலிருந்து வெளியே வரமுடியாத சூழலில் வானம், நட்சத்திரங்கள், சந்திரன்..

மேலும் படிக்க

கஷ்மீர்: கள ஆய்வு செய்த எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள்

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்குறிஞர் ஷர்ஃபுத்தீன் அஹ்மத் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி, தேசிய செயலாளர் சீதாராம் கோஹிவால் உள்ளடக்கிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மூவர் குழு கஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தங்கி ஆய்வை மேற்கொண்டது.

கஷ்மீர் முழுவதும் தகவல் தொடர்பு மற்றும் வலைதளம் முடக்கப்பட்டது மட்டுமில்லாமல், பாஜக தவிர்த்து பிற எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

. கஷ்மீர் பள்ளத்தாக்கு இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. …

மேலும் படிக்க

இயல்பு நிலைக்கு திரும்புகிறதா கஷ்மீர்?

கஷ்மீர் இயல்பாகவே இருக்கிறது, கஷ்மீரில் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, பாதுகாப்பு படையினரால் அங்கு யாரும் கொல்லப்படவில்லை, சிறுவர்கள் யாரும் அங்கு கைது செய்யப்படவில்லை என கஷ்மீர் குறித்து தொடர்ந்து பொய்களை கூறி வருகின்றனர் சங்பரிவார்கள். ‘‘கஷ்மீர் தொடர்ந்து யூனியன் பிரதேசமாக திகழாது, அது விரைவாக மீண்டும் மாநில அந்தஸ்திற்கு திரும்பும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஆனால் கஷ்மீர் விவகாரங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் இவர்களின் கூற்றுகளின் மீது நம்பிக்கை வைப்பதில்லை…

மேலும் படிக்க

அலாவுதீன் கில்ஜி

26.01.2018 தி இந்து தமிழ் நாளிதழில் ‘பத்மாவத் வரலாற்றின் மீது படரும் வெளிச்சம்’ என்ற கட்டுரையை 2018ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பிரியத்திற்குரிய எஸ். ராமகிருஷ்ணன் தந்துள்ளார்.

அதில் சொல்வார், ‘சித்தோரை கில்ஜி தாக்கி சண்டையிட்டது வரலாற்று உண்மை. பத்மாவதி கதையும் அவளை அடைய வேண்டும் என கில்ஜி படையெடுத்ததும் கற்பனை. கில்ஜி இறந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட காவியத்தில் இருந்து உருவான கற்பனை…

மேலும் படிக்க

  1. நேஷன் ஆஃப் இஸ்லாம்

தூதுக் கடிதங்கள்

தம் அலுவலகக் கணினியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று மாலை அலுவலகத்திலிருந்து வந்ததில் இருந்து சற்று பிஸியாகவே காணப்பட்டார். இஷா தொழுது முடித்து இரவு உணவு முடிந்தபின், மீண்டும் லேப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார். முக்கிய வேலையில் தந்தை மூழ்கியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட ஸாலிஹாவும் அப்துல் கரீமும் அவரைத் தொந்தரவு புரியாமல் தாயாரிடம் சென்று குர்ஆன் ஓதியபடி அமர்ந்திருந்தனர்…

மேலும் படிக்க

தீயோருக்கு அஞ்சாதே

முஸ்தஃபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை முஸ்தஃபா வீட்டிற்கு வந்ததும் அப்துல் கரீம் அவரிடம் ஓட்டமாய் ஓடினான்.

‘அத்தா! நம்ம பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?’

கரீமின் உம்மா மதியமே தன் கணவருக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல், ‘என்னாச்சு?’ என்று விசாரித்தார் முஸ்தஃபா. மேலும் படிக்க

குடும்பத்தோடு தொழுவோம்!

“(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத்தான்.” (அல்குர்ஆன் 20:132)

தனது இறுதி தூதரான நபி (ஸல்) அவர்களிடம் வாசிக்கவும், சிந்திக்கவும் நூர் மலையின் உச்சியில் வைத்து கட்டளையிட்ட அல்லாஹ், மிஃராஜின் 

மேலும் படிக்க

Comments are closed.