புதிய விடியல் – 2019 அக்டோபர் 01-15

0

காந்தியின் பன்முக தேசமும் பா.ஜ.க.வின் ஒற்றை தேசமும்

காந்தியின் 150வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வேளையில் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கி காந்திக்கு பெருமை சேர்ப்போம் என மன்கிபாத் நிழ்ச்சியில் உரை நிகழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. காந்தியின் போராட்டமும், முழக்கங்களும், காலணிய ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பும், தேச ஒற்றுமைக்கான முயற்சிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிறைய இருக்கின்றன. தேசமும், மக்களும் எப்படி இருக்க வேண்டும் என்ற பார்வை காந்திக்கு இருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்த பார்வையே கோலோச்சி இருக்கிறது. அதனால்தான் காந்தியின் போராட்டத்தையும், தியாகத்தையும் குறுகிய பார்வையோடு பார்க்கின்றனர். 

மேலும் படிக்க

இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு நீதி நிலைபெறுமா?

ராமனின் வம்சம் நாங்கள்: பா.ஜ.க. எம்.பி.

ஆகஸ்ட் 11 -ஞாயிற்றுக்கிழமை

உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பிய பின், அடுத்தடுத்த தினங்களில், அதாவது ஆகஸ்ட் 11, ஞாயிற்றுக்கிழமையன்று “கடவுள் ராமரின் மகனான குசனின் வம்சாவளியில் வந்தது எங்கள் குடும்பம்” என ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், ராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான தியா குமாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறியது:

மேலும் படிக்க

நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போன நடைமுறையா

உலகிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆக்கப்பூர்வமாக முன்னோக்கி செல்லும் நாடுகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற அமைப்பு முறையும், பல கட்சி ஜனநாயகமும் ஏதேனும் ஒரு நபரின் மூளையில் உதித்த திட்டமல்ல. இந்தியாவில் நடந்த சுதந்திர போராட்டங்களும், அவற்றிற்கு தலைமையேற்ற தேசிய இயக்கங்களும் அரசியல்

மேலும் படிக்க

புதிய கண்காணிப்பு வளையம்

நாடு பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்படும்போது பழுதுகள் இல்லாத கண்காணிப்பு தேவைப்படும். மிகவும் நவீனமான கண்காணிப்பு கட்டமைப்புகளை கோடிகளை செலவு செய்து உருவாக்குவதற்கு அரசுகளை தூண்டுவது பாதுகாப்பு குறித்த அச்சமாக இருக்கலாம். ஒன்று இந்த அச்சம் போலியாக உருவாக்கப்படலாம் அல்லது உண்மையிலேயே அத்தகையதொரு ஆபத்து இருக்கலாம். அமெரிக்காவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் பிற நாடுகள் மீது அவர்களின் ஆதிக்கத்தை திணித்ததே காரணம். சீனா குறைபாடற்ற பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கு காரணம், சொந்த நாட்டு மக்கள் மீதான அவநம்பிக்கையாக இருக்கலாம். வல்லாதிக்க நாடுகளில் மக்கள் இத்தகைய கண்காணிப்பு வளையங்களில் தான் வாழுகின்றனர். அங்கெல்லாம் ஆட்சியாளர்களின் விருப்பம் குடிமக்கள் கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே வளர்ந்து வரும்…

மேலும் படிக்க

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்:

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டித்து இரண்டு வாரங்களுக்குள் உத்தரவிடுமாறு உத்தர பிரதேச  அரசுக்கு  உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும சிறப்பு நீதிபதி, தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை குறிப்பிட்டு உச்சநீதி மன்றத்துக்கு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, உத்தர பிரதேச அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதியிடம், சிறப்பு நீதிபதியின் 5 கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும்…

மேலும் படிக்க

அலாவுதீன் கில்ஜி

ஜெய்ப்பூரில் அரசகுடும்பத்தின் இளவரசியும் பாஜக எம்.எல்.ஏ. வுமான தியாகுமாரி, எந்தத் திரைப்படமும் வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறி ஒரு சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். (தினமணி 22.11.2017)

கண்ணியத்திற்குரிய இளவரசியார் அவர்களே, அதைத்தானே நாங்களும் சொல்கிறோம்.

மேலும் படிக்க

  1. ‘அங்கிள் சாம்’ ஜான் கென்னடி

ரஸ்டின்: உங்கள் பொருளாதார சூழலில் கறுப்பர்களை எங்கு குடியேற்றுவீர்கள்? இறைத்தூதர் மோசஸ், யூதர்களை அழைத்துச் சென்றது போல செல்லப் போகிறீர்களா?

மால்கம் ஙீ: மோசஸ்… சரியான உதாரணம். இன்றைய அமெரிக்க கறுப்பர்களும் ஃபாரோ என்ற அரசனிடம் அடிமையாக இருந்த அன்றைய யூதர்களும் ஒப்பிடத்தக்கவர்கள். அடிமையாக இருந்த அந்த மக்கள், 

மேலும் படிக்க

அவனிருக்க பயமேன்?

நள்ளிரவு நேரம். முஸ்தபா தம் குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அவர்கள் சென்றிருந்தனர். அங்கு இரண்டு நாள் தங்கியிருந்துவிட்டு மாலையில் கிளம்பினர். கிளம்பும்போதே இருட்டிவிட்டது. நெடுந்தொலைவுப் பயணம் என்றாலும் விடிவதற்குள் சென்னையை அடைந்துவிட முடியும் என்று முஸ்தபா திட்டமிட்டிருந்தார்.

மேலும் படிக்க

பெற்றோருக்கு அழகிய நன்மை செய்யுங்கள்

‘‘அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப்(சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம். – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!’’ (அல்குர்ஆன் 17:23)

மேலும் படிக்க

Comments are closed.