புதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15

0

NIA சட்டத் திருத்தத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

தசியப் புலனாய்வு முகமை (ழிமிகி) சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை நாம் தனித்துப் பார்க்க இயலாது. இந்தியா முழுவதுக்குமான ஒரே கல்வி, ஒரே பாடத் திட்டம், ஒரே பாடப் புத்தகம், ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே நேரத்தில் மத்திய மாநிலத் தேர்தல்கள், ஒரே ரேஷன் கார்டு என்கிற வரிசையில் இந்தியா முழுவதுக்குமான ஒரே புலனாய்வு முகமை என்கிற இந்தக் கருத்தாக்கம் இன்று புகுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல புலனாய்வு மற்றும் குற்றச் சட்டங்களில் இத்துடன் சேர்த்து இப்போது மூன்று ஆபத்தான திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஹிகிறிகி சட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள்

ஹிகிறிகி சட்டம் இயற்றப்பட்டபோது ‘சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு’ எதிரான சட்டம் என்றே அறிவிக்கப்பட்டது. குறிப்பாகப் ‘பிரிவினை’..

மேலும் படிக்க

NIA முகமை, UAPA சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் தேசிய புலனாய்வு முகமை (ழிமிகி) க்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கியுள்ள மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், புதிய திருத்தங்கள் அடங்கிய ஹிகிறிகி கருப்பு சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைத்த அனைத்து இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்  27.07.2019 சனிக்கிழமை அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநில செயலாளர் எம். நாகூர் மீரான் வரவேற்புரை..

மேலும் படிக்க

என்.ஐ.ஏ.வுக்கு மிதமிஞ்சிய அதிகாரம்!

இன அழித்தொழிப்புக்கு முக்கிய ஆயுதமாக பாசிச சக்திகள் உலகம் முழுவதும் “இரத்த சுத்திகரிப்பு” கொள்கையை பயன்படுத்தினர்.யூத ரத்தம் கலந்ததால் ஜெர்மன் மக்கள் அசுத்தமடைந்துவிட்டார்கள் என்ற ஹிட்லரின் தீர்ப்பை சங்பரிவாரம் இந்தியாவில் மறுவரையறைச் செய்து  யூதர்களுக்கு பதிலாக முஸ்லிம்களை சேர்த்துக்கொண்டார்கள். நீதித் துறையையும், சட்டங்களையும், இதர அரசு நிறுவனங்களையும் முஸ்லிம்களை சிறைக்குள் தள்ளவும், நாடு கடத்தவும் பயன்படுத்துகின்றனர். சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜன்சியின்..

மேலும் படிக்க

பேரம் பேசும் NIA தொடரும் குற்றச்சாட்டுகள்

தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. பேரம் பேசுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை தொடர்ந்து பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ. 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு முற்றிலும் முஸ்லிம்களை குறிவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்துத்துவ பயங்கரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போயின. குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளில் பெரும்பான்மையினர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், அல்லது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க., என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் என்.ஐ.ஏ. சட்டத்தில் சில திருத்தங்களை…

மேலும் படிக்க

தொலைந்து போன வருடங்கள்

23 வருடங்களுக்குப் பின்னர் ஆறு பேர் விடுதலை!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆக்ரா – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அரசு பேருந்தில் மே 22, 1996 அன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர். டெல்லி லஜ்பத் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு மறுதினம் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் எட்டு நபர்களுக்கு செப்டம்பர் 29, 2014 அன்று தண்டனையை விதித்தது விசாரணை நீதிமன்றம். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரான அப்துல் ஹமீது முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கில் தண்டனை பெற்றவர்கள் ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபீனா மற்றும் கோவர்தன் பர்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாவித் கான், அப்துல் கனி, லதீப் அகமது, முகமது அலி பட், மிர்ஸா நிசார் ஹூஸைன் மற்றும் ரயீஸ் பேக்…

மேலும் படிக்க

இறுதி உரையும் – இந்திய முஸ்லிம்களும்

“மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில் இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.”

நாம் மற்றுமொரு ஹஜ்ஜுப் பெருநாளை அண்மித்துக் கொண்டிருக்கின்றோம். ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜிகள் “அல்லாஹ்வே, உனக்கு விடையளித்து விட்டோம்; புகழும் அருளும் உனக்குரியது, ஆட்சி அதிகாரம் உனக்குரியது, உனக்கு இணையில்லை” எனும் தல்பியா முழக்கங்களுடன் இறையில்லத்தை அடையவும், வலம் வரவும் (தவாஃப் செய்யவும்) சென்றடைந்திருப்பார்கள்…

மேலும் படிக்க

32.திசைதப்பிய உளவுத்துறையின் குறி

“என்னம்மா சொல்றீங்க?” ஈதல் பதறினார்.

“ஆமா, உண்மையைத்தான் சொல்றேன் அவர் நடவடிக்கைகள்சொல்லவே அசிங்கமா இருக்கு” கிளாரா முஹம்மது தன் மகளிடம் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

“கொஞ்சம் வால்யூமை அதிகப்படுத்துங்க…’’ தாமஸ் நீல்ஸன், தனக்கு கீழ் பணிபரியும் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

“சார், ஈதல் யார்?”

“ஈதல் ஷெரீஃப். எலிஜா – கிளாரா தம்பதியின் மகள். ஷெரீஃப்பின் மனைவி. Muslim Girls Training அமைப்பின் தேசிய பொறுப்பாளர்தான் இந்த ஈதல். இவருடைய கணவர் ஷெரீஃப், Fruits of islam தொண்டர் படையின் தலைமை அதிகாரி.”..

மேலும் படிக்க

கனவும் பலியும்

நள்ளிரவு நேரம். திடீரென்று அப்துல் கரீம் அழும் குரல் கேட்டது. முஸ்தபாவும் அவர் மனைவியும் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தனர். கரீம் கட்டிலில் எழுந்து அமர்ந்து இருந்தான். அவனது முகமும் அழும் பாவனையில் இருந்தது.

“என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள் அம்மா.

“ஓக்கே. கவலைப்படாதே” என்று அவனை அணைத்துக் கொண்டார் அம்மா.

மேலும் படிக்க

Comments are closed.