புதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31

0

அத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்!

பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலையான ஹாங்காங், சீனாவின் ஆதிக்கத்தில் சிக்குவதை தவிர்க்க ஜனநாயகவாதிகளும், சுதந்திரத்தை விரும்பக்கூடியவர்களும் கடந்த வாரங்களில் வீதிகளில் இறங்கிய போராடியதோடு நாடாளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றியதையும் உலகம் கண்டது. சர்வதேச வர்த்தக மையங்களில் ஒன்றான ஹாங்காங்கின் மீது தனது பிடியை இறுக்குவதற்கான சீனாவின் முயற்சி பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுவதாகும் என்று ஹாங்காங் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில், சீனா போன்ற ஜனநாயக-மனிதநேயத்திற்கு எதிரான, சர்வாதிகார குணாதிசயம் கொண்ட நாட்டுடன் கையெழுத்திட முடியாது 

மேலும் படிக்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சமூக சேவைகள், கல்வி மேம்பாட்டு பணிகள், பேரிடர் மீட்பு பணிகள், மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், இரத்ததானம் வழங்குதல் போன்ற மக்கள் நல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டு துறை சார்பாக  உயிர்காக்கும் இரத்ததானங்கள் வழங்குதலில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. விபத்துகள் , அவசர அறுவை சிகிச்சை போன்ற காலங்களில் இரத்தத்தின் தேவை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் ப்ளட் டோனர் ஃபோரமின் தன்னார்வளர்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு உயிர்காக்கக்கூடிய  

மேலும் படிக்க

ஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்?

சர்வாதிகார ஆட்சியின் ஆபத்தான அறிகுறிகளை சுதந்திர இந்தியா கடந்து செல்கிறது. ஜனநாயகம் இனி எவ்வளவு காலம் நீடிக்கும்? என்ற கேள்வியை தேச நலனில் அக்கறைகொண்டவர்கள் எழுப்புகிறார்கள். 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு-கஷ்மீரை மாற்றிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்த பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கை நாட்டின் நேர்மை மற்றும் இறையாண்மையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த எல்லை மாநிலத்தை இரண்டாக துண்டாடி மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. பிரிவு 35கி ஐ ரத்து செய்ததன் மூலம் கஷ்மீர் மக்களுக்கான சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன. கஷ்மீர்

மேலும் படிக்க

இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்

அல்குர்ஆன் அருள் நிறைந்த பூமியாக ஒருங்கிணைந்த ஷாம் தேசத்தை விவரிக்கின்றது. முந்தைய ஷாம் தேசம் என்பது தற்போதைய சிரியா, லெபனான், ஃபலஸ்தீன், ஜோர்தான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும்.

நபிகளாரின் காலத்திற்குப்பின் நேர்வழிபெற்ற கலீஃபாக்கள் அபூபக்கர் மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களின் ஆட்சியில் ஷாம் தேசத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுதான் இப்புத்தகத்தின் கரு.

முஸ்லிம்களின் முதல் கிப்லா பைத்துல் முகத்தஸ். இறைத்தூதர்கள் பலரின் அடக்கதலங்கள் நிறைந்த இப்புனித பூமி அப்போது ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்புனித பூமி முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படும் என்ற நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பின்படி கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் முதல் படையை ஷாம் நோக்கி அனுப்பி வைக்கின்றார்கள்.

மேலும் படிக்க

சமூக வாழ்க்கை, எனும் நூலை ஷி. திருவேங்கடாச்சாரி, 1950இல் சென்னையிலிருந்து வெளியிட்டுள்ளார். அதில் அலாவுதீன் கில்ஜியின் ரஜபுத்திரப்படை யெடுப்பைப் பற்றி பக்கம் 65இல் சொல்வார். ‘சித்தூரை முற்றுகையிட்டுக் கைப்பற்றிக் கொண்டார்’ என்று மாத்திரமே குறிப்பிடுவார், பத்மினியைப் பற்றி அந்த நூலில் எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.

கௌசிகன் (வாண்டு மாமா) 1979இல் ‘மானங்காத்தமாவீரர்’ என்ற நூலை மஹாராணா பிரதாப் பற்றி தந்துள்ளார். ‘சுதந்திர வீரன் ராணா பிரதாபசிம்மன்’ என்று மு.கா. நாராயணசாமி தினகரன் இரங்கூனிலிருந்து 1929இல் 72 பக்கங்களைக் கொண்ட நூலைத் தந்துள்ளார்.

ஜி.ஷி. சீதா ராம அய்யர் திரு வனந்தபுரத்திலிருந்து  1948இல் பிரதாபசிங் பற்றி  60 பக்கங்களைக் கொண்ட நூலைத் தந்துள்ளார்.

சென்னை ஞான போதினி பிரசுராலயம் சார்பில் தேசபக்தி கிருஷ்ணஸ்சுவாமி சர்மா இரஜபுத்திர மகாவீரர் கும்பமஹா ராணா பற்றி 1923இல் 95 பக்கங்களைக் கொண்ட நூலைத் தந்துள்ளார்.

மேலும் படிக்க

  1. சிவப்பு களிறுகள்

நியூ இங்கிலாந்து கல்லூரியில் வெள்ளை மாணவர்கள் மத்தியில் உரையாற்றி விட்டு அப்போதுதான் நியூயார்க் திரும்பியிருந்தேன். ஹார்லெம் நகரில் ஏழாம் எண் பள்ளிவசால் அருகில் உள்ள, முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான, உணவு விடுதியில் இயக்கச் சகோதரர்களோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன்.

ப்ரதர்… கியூபா நல்லெண்ண கமிட்டியில் (fair play for cuba committee) நாளுக்கு நாள் உறுப்பினர்கள் அதிகமாக சேருவது பற்றி உங்க கருத்து என்ன? லூயிஸ் ஙீ கலந்துரையாடலை தொடங்கி வைத்தார்.

‘‘கியூபா நல்லெண்ண கமிட்டியால், அமெரிக்காவில் உள்ள கறுப்பர்களுக்கு என்ன நன்மை?’’ பெஞ்சமின் ஙீ வியப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க

சதை ஆடும்

ஒருநாள் மாலை முஸ்தபா வீட்டிற்குள் நுழையும்போது வீடு பரபரப்புடன் இருந்தது. ஹாலில் உள்ள சோபாவில் ஸாலிஹாவும் அப்துல் கரீமும் வருத்தமான முகபாவத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். ஸாலிஹாவின் உள்ளங்கையிலும் கரீமின் பாதத்திலும் பேண்ட் எய்ட் ஒட்டப்பட்டிருந்தது. அவர்களின் அம்மா கிச்சனில் தரையை ஈரத் துணியால் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் முஸ்தபா. “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார்.

“வ அலைக்கும் ஸலாம்” என்று பிள்ளைகளிடமிருந்து அமைதியான பதில் வந்தது.

மேலும் படிக்க

புகழ்ச்சி மீதான ஆசை

எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும், தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் -அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. (அல்குர்ஆன்: 3:188)

நற்செயல்களின் உத்தேச நோக்கங்களை கவனிக்கும்போது மனிதர்கள் பல வகையினராவர்.

மேலும் படிக்க

Comments are closed.