புதிய விடியல் – 2019 செப்டம்பர் 01-15

0

மயான அமைதியில் கஷ்மீர்!

விமான பயணத்தில் விமானம் ஏறும் போதும் தரையிறங்கும் போதும் ஜன்னல்களின் திரைகளை திறந்து வைக்குமாறு விமான சிப்பந்திகள் கூறுவர். ஆனால் தற்போது ஜம்மு கஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்லும் விமானங்களில் விமானம் தரையிறங்கும் போது ஜன்னல் திரைகளை மூடுமாறு எதிர்மறை அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. அங்கு செல்லும் பயணிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இது முதலில் சற்று வியப்பை கொடுத்தாலும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள கஷ்மீரின் நிலையை தங்கள் கண்களில் இருந்து மறைப்பதற்கே இந்த ஏற்பாடு என்பதை விரைவாக புரிந்து கொள்கின்றனர். பாதுகாப்பு படைகளை குவித்து தொலைத்தொடர்புகளை துண்டித்து ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்த பாரதிய ஜனதா அரசாங்கம் அம்மாநிலத்தை இரண்டு 

மேலும் படிக்க

காட்டுப்பள்ளி துறைமுகம்: அதானியின் வளர்ச்சியும்  இயற்கையின் அழிவும்

2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, எல்லா வெளிநாட்டு பயணங்களிலும் உடன் சென்றவர் அதானி. குஜராத்தில் இல்லாத வளர்ச்சியை இருந்ததாக உலகிற்கு காட்டியவர்கள் இந்த இரண்டு நபர்களும். தற்போது தமிழகத்தில் அதானிக்கு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம். இதில் நாட்டிற்கு என்ன இலாபம்? தமிழகத்திற்கு என்ன இழப்பு? ஏன் எதிர்க்க வேண்டும்? பார்ப்போம்.

சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டுப்பள்ளி துறைமுகம். 330 ஏக்கர் பரப்பளவிலான இத்துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் பாராமரித்து வந்தது. கடந்த 2015ம் ஆண்டு எல் அன்ட் டி

மேலும் படிக்க

பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே ‘பயங்கரவாதிகள் ஊடுருவல்’ பரபரப்பு!

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகஸ்ட் 24 அன்று கோவை மாநகர காவல்துறை ஆணையரை கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் ‘‘தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய செய்திகள் நேற்று நாடு முழுவதும் ஊடகங்கள் வாயிலாக வெளியானது. அதிலும் குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற செய்தி பத்திரிகைகள்,  டிவி சேனல்கள் மூலமாக பரப்பப்பட்டன. ஒரு சில ஊடகங்கள் தீவிரவாதிகளுடைய புகைப்படம் மற்றும் 

மேலும் படிக்க

ப.சிதம்பரம் கைது: காங்கிரஸ் பயில வேண்டிய பாடங்கள்

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மத்திய புலனாய்வு துறையால் (சி.பி.ஐ.)ஆகஸ்ட் 21 இரவில் கைது செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் 2018 பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான இந்திராணி முகர்ஜி மற்றும் அவர் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர். ஆனால் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இவர்களின் கோரிக்கையை

மேலும் படிக்க

ஆழ்கடல் மீன்பிடிப்பு; உரிமை பறிபோகிறது!

ஆழ்கடல் மீன்பிடித்தலில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத்திருத்தம் காரணமாக மாநிலங்களுக்கான உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக மாநிலங்களிடம் கருத்தினைக் கேட்டுள்ளது மத்திய அரசு. மீன் பிடித்தலில் மாநில அரசுகளுக்கு என்று பல உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கரை பகுதிகளில் இருந்து 12 நாட்டிகல் மைல் வரையுள்ள கடல் பரப்பில் உள்ள கட்டுப்பாடுகள், அதிகாரம் ஆகியவை அந்தந்த மாநில அரசுகளிடம்தான் உள்ளது.

அதேபோல் கடலில் மீன்பிடித்தல் உரிமையையும், அனுமதியையும் அந்தந்த மாநில அரசுகளே விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு வழங்குகின்றது. மீன்பிடி தடைகாலம் தொடர்பான கட்டுப்பாடுகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே  இருந்து வருகின்றன. இவைகள் அனைத்தும் அரசமைப்பு வாயிலாக வழங்கப்பட்ட உரிமைகள்

மேலும் படிக்க

தீண்டாமைக்கு தீர்வு என்ன?

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்தப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இயற்கையாக மரணிப்பவரின் சடலங்களை அங்குள்ள இடத்தில் புதைக்கிறார்கள். விபத்து போன்ற அகால மரணமடைந்தோரின் உடல்களை ஊருக்கு வெளியே எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஊருக்குள்ளேயே…

மேலும் படிக்க

  1. தோழருடன் ஒரு பொழுது…

ஹர்லெம் ஏழாம் எண் பள்ளிவாசலில் இயக்கச் சகோதரர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். செப்டம்பர் மாத மாலைப் பொழுது. பேச்சு வெவ்வெறு திசைகளில் சென்றது. ‘ஒன்றிணைதலில்’ ஆர்வம் காட்டும் கறுப்பினத் தலைவர்களின் செயல்பாடுகள், அமெரிக்க அதிபர் தேர்தல், கறுப்பின மாணவர்களின் உள்ளமர்வு போராட்டம் என ஆழமாக விவாதிக் கொண்டிருந்தோம்.

தொலைபேசியில் எனக்கு அழைப்பு. ‘‘என்ன?” ஜோசப் ஙீ கேட்டார்.

‘‘கியூபா நல்லெண்ண கமிட்டி அவசரக் கூட்டமாம்”

மேலும் படிக்க

குர்ஆனிய ஒலி

முஸ்தபாவின் வீட்டிலிருந்து இரு வீடுகள் தள்ளியிருந்த வீட்டில் ராபியா என்ற பெண்மணி வசித்து வந்தார். அவர் வயது முதிர்ந்தவர். அவருடைய கணவர் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் வெளிநாட்டில் பணி புரிந்தனர். அங்கேயே தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தங்கள் தாயாருக்குத் துணையாய் வீட்டில் தங்கி கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

கனிவும் அன்பும் நிரம்பிய ராபியாவை ஸாலிஹாவுக்கும் கரீமுக்கும் ரொம்பப் பிடிக்கும். அவரும் தம் பேரப் பிள்ளைகளைப் போல் இருவரையும்…

மேலும் படிக்க

ஹாஜிகளின் சேவையில் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம்

இஸ்லாத்தின் உன்னத கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற இவ்வருடம் உலகெங்கிலுமிருந்து 25 இலட்சம் ஹாஜிகள் மக்கா நகர் நோக்கி வருகை புரிந்தனர். உலக முஸ்லிம்களின் ஒற்றுமை மாநாடாகிய ஹஜ் எனும் புனித கடமையின் முக்கிய தினமான துல்ஹஜ் பிறை 9ம் நாள் மக்கா நகரில் கஃபா ஆலயத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அரபா எனும் மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடினர். ஹஜ் என்பது அரபாவில் ஒன்று கூடுவதுதான்.  அங்கு மதிய வேளையில் நடைபெறும் குத்பா எனும் பேருரையும் அதனைத் தொடர்ந்து… 

மேலும் படிக்க

Comments are closed.