புதிய விடியல் – 2020 ஜனவரி 01-15

0

சி.ஏ.ஏ.வை புறக்கணிப்போம்! தேசத்தை பாதுகாப்போம்!!

டிசம்பர் மாத குளிரிலும் இந்தியா மக்களின் கோப மூச்சுக் காற்றால் அனல் தெறிக்கிறது. டெல்லி துவங்கி நாட்டின் அனைத்து மாநில மக்களும் தங்களின் எதிர்ப்பை தைரியமாக வீதிக்கு வந்து தெரிவித்து வருகின்றனர்.

ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டம் புரட்சியின் வித்தாக தூவப்பட்டு, அது அனைத்து கல்லூரி வளாகங்களிலும் படர்ந்து விண்ணை பிளக்கும் கோஷங்கள் வீதிவரை ஒலிக்கின்றது. மாணவர்களின் முழக்கங்களின் சத்தம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் சங்கிகளின் செவியை செவிடாக்கி விடுமோ

என்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த உஷ்ணத்திற்கு காரணம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்படும் என்ற அறிவிப்பும்.

மேலும் படிக்க

தேசதுரோக வழக்கிலிருந்து ஐந்து பேர் விடுதலை

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) நடத்தி வந்த பத்திரிகையான சிம் செய்திமடல் பத்திரிகையில் ‘காஷ்மீர் இந்தியாவின் கொசோவா’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை 1999-ம் ஆண்டு  மே, ஜூன் மாத இதழ்களில்  வெளிவந்தது. எஸ்.ஹெச்.முஹ்யித்தீன் என்பவர் அக்கட்டுரையை  எழுதியிருந்தார். கோவையில் ஷாஜஹான் என்பவரால்  பொதுமக்களிடம் அப்பிரதிகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி அப்போதிருந்த கோவை காட்டூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் சுந்தரராஜன் அவரைக் கைது செய்தார்.

பத்திரிகை ஆசிரியரான ஷமீமுல் இஸ்லாம், துணை ஆசிரியரான செய்யத் அப்துர்ரஹ்மான், நிர்வாகியான செய்யது முஹம்மத், இதழ்,

மேலும் படிக்க

பலவீனமடையும் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சி.ஏ.ஏ.) எதிராக பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் தாக்கல் செய்த அறுபது மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் கடந்த 18-ம் தேதி

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மத்திய அரசின் நிலைப்பாட்டை அறியாமல், எந்த கருத்தையும் கூறவோ, முடிவு செய்யவோ இயலாது என்றும், விளக்கம் கோரி மத்திய

அரசுக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் கூறி நீதிபதிகள் இந்த விவகாரத்திலிருந்து நழுவுவதிலேயே முனைப்பாக இருந்தனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு தீவிரமடைந்த

மேலும் படிக்க

சிஏஏ வை உடனடியாக திரும்பப் பெறு ‘ பாப்புலர் ஃப்ரண்ட்

பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயக உரிமைகளை மிருகத்தனமாக நசுக்குவதற்கு கண்டிப்பு! – பாப்புலர் ஃப்ரண்ட் குறிவைக்கப்படுவதை எதிர்த்து சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்படும்!

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தில் பாரபட்சமான தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை திரும்பப் பெற வலியுறுத்தியும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்தக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிகிகி நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த மிகப்பெரும் மக்கள் போராட்டங்களில் வேறுபாடுகளை களைந்து பெரும்பான்மையான மக்கள் கலந்து கொண்டது மத்திய அரசின் மதரீதியான குடியுரிமை சட்டத்தினை நிராகரித்துள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது. நகரங்களிலும், கிராமங்களிலும் அணிவகுத்துச் சென்ற..

மேலும் படிக்க

போரிஸ் ஜான்சனின் வெற்றி தரும் செய்தி!

«பாரிஸ் ஜான்சனின் வெற்றி பிரெக்சிட்டுக்கு (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம்) ஆதரவான பிரிட்டீஷ் மக்களின் தீர்ப்பாக பொதுவாக கருதப்படுகிறது. ஐரோப்பாவின் பரந்த இருப்பிலிருந்து விலகி பிரிட்டிஷ் தேசபக்தியின் குறுகிய வட்டத்திற்குள் ஒடுங்க முயற்சிக்கும் தேசியவாதிகளின் உணர்வுகளை இந்தத் தேர்தல் பிரதிபலித்தது. ஆனால், இந்த தேர்தல் வெற்றியின் உள் மட்டங்களில் இன்னும் கவனமாக ஆய்வு செய்யவேண்டிய கூறுகளும் உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் உலகம் முழுவதும் வலுப்பெற்று வரும் வலதுசாரி சித்தாந்தத்தை நோக்கி பிரிட்டன் நகர்கிறதா என்பது குறித்த சில ஆபத்தான அறிகுறிகளை காணமுடிகிறது.

பிரிட்டீஷ் முஸ்லிம்களின் அமைப்பான பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் (எம்.சி.பி.) வெளிப்படுத்தியுள்ள கவலை இந்த சூழலில் மிகவும் பொருத்தமானது. பிரெக்சிட்டைப் போலவே 

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்

15.3.1919

மூல்டானில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆதரவில் டெல்லி கேட்டுக்கு வெளிப்புறத்தில் பௌலிசேது குமாரதாஸ் எனுமிடத்தில் ரௌலட் மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

டாக்டர் சைபுதீன் கிச்சலு

அமிர்தசரஸலிருந்து டாக்டர் சைபுதீன் கிச்சலு லாகூரிலிருந்து தூனி சந்திரர், மோஸன்ஷா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். சுய ஆட்சி வேண்டுமென்றும், ரௌலட் மசோதவைக் கண்டித்தும் வீராவேசமாகப் பேசினார்கள்.

மேலும் படிக்க

  1. கிறிஸ்தவத்தை போதித்தாரா இயேசு?

“அல்லாஹ்”

இந்த ஒற்றைச் சொல்லை வாய் நிரம்ப சொல்லிவிட்டு, சற்று நிறுத்தினேன். என்னுடைய உச்சரிப்பும் தொனியும் பார்வையாளர்களை சிலிர்க்கச் செய்தது.

“இறைத்தூதர் மோசஸ் இறைவனை, ‘அல்லாஹ்’ என்றே அழைத்தார். ஆபிரஹாம் இறைவனை, ‘அல்லாஹ்’ என்றே அழைத்தார். நோவாவும், லூத்-தும் ‘அல்லாஹ்’ என்றே அழைத்தனர்.

அல்லாஹ் அல்லாஹ் லாமா சபக்தானி என்றே இயேசுவும் அழைந்தார். இயேசு பேசிய மொழியை அறிந்தவர்கள், அவர் கடவுளை ‘அல்லாஹ்’ 

மேலும் படிக்க

வெறுப்பு  தொழிற்சாலை

தீவிர வலதுசாரிகளின் மூலம் ஆதாயம் பெறும் ஃபேஸ்புக்

இஸ்ரேலில் இருந்து பெயர் குறிப்பிடப்படாத செய்தி ஒன்று  36 வயதான பியூ வில்லெரியலுக்கு  ஒரு பிற்பகலில் வந்தது.

புளோரிடாவின் கிராமப்புற வடக்கில் அவரது குடும்பத்தின் 42 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வீட்டில் வசித்து வரும் அவர் தனது தாய், தந்தையுடன் இணைந்து டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவான வலதுசாரி ஃபேஸ்புக் பக்கம் ( ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பக்கத்தில் பகிர்வதற்கான செய்திகளை தேடிக் கொண்டிருந்த போதுதான்

மேலும் படிக்க

Comments are closed.