புதிய விடியல் – 2019 ஜூலை 01-15

0

ஒரே தேசம் தேர்தல்?

“ஒரே” என்ற வார்த்தையின் மீது ஒரு மோகம் ஊட்டப்படுகிறது. அந்த மோகம் “ஒரே” என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களின் மீதான விசுவாசமாக மாற்றப்படுகிறது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்றெல்லாம் வற்புறுத்தப்படுவதன் தொடர்ச்சியாக நடைமுறையில் ஒரே தேர்வு கொண்டுவந்துவிட்டார்கள், ஒரே கல்விக்கொள்கையைக் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது கிளப்பப்பட்டு இப்போது மறுபடியும், ஏதோ இதுவே நாட்டின் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்பது போல கடைவிரிக்கப்பட்டிருப்பது “ஒரே தேசம் ஒரே தேர்தல்” என்ற கருத்தாக்கம். அதாவது நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகப் பகுதிகளின் சட்டமன்றங்களுக்கும் ஒரே கால அட்டவணையில் தேர்தல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 19 அன்று இது தொடர்பான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இப்படி கூட்டப்பட்டதே மேலும் படிக்க

யு.ஏ.பி.ஏ.: திருத்தம் அல்ல, திரும்பப் பெற வேண்டும்!

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தை (யு.ஏ.பி.ஏ.) கடுமையாக்குவதற்கான மத்திய மோடி அரசின் நடவடிக்கை குறித்து  மத சிறுபான்மையினரும், மனித உரிமை அமைப்புகளும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்தியர்கள் தொடர்புடைய வெளிநாடுகளில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களில் வழக்கு பதிவு செய்யவும், குற்றவாளிகளை அடையாளம் காண டி.என்.ஏ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், தீவிரவாதியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை தீவிரவாதியாக அறிவிக்கவும் என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் வரைவு மசோதா.. மேலும் படிக்க

மூன்றாம் உலகப் போருக்கு தயாராகிறதா உலகம்?!

 

காட்டில் பயணம் செய்த ஒருவரை சிங்கம் ஒன்று துரத்த அதிலிருந்து தப்பிக்க அருகிலுள்ள மரத்தில் ஏறினான். ஏறிய பிறகுதான் மரத்தின் மேலிருந்து ஒரு பாம்பு தன்னை உற்று நோக்குவதை கவனிக்கிறான். இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் அவன் அமர்ந்திருக்கும் மரக்கிளையை எலி ஒன்று பதம் பார்த்துக் கொண்டிருப்தையும் காண்கிறான். அவனின் நிலை இப்போது எப்படி இருக்கும்? இந்த கதையை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். தண்ணீர் பற்றாக்குறையில் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் நமது நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இதனை எளிதாக உணர வைக்கிறது நிமிர் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள ‘தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்’ என்ற புத்தகம்.

குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது… மேலும் படிக்க

முர்ஸியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி நஜ்லா மஹ்மூத் வழங்கிய செய்தி

டாக்டர். முஹம்மது முர்சி எகிப்திய குடியரசின் சட்டப்பூர்வமான ஜனாதிபதியாக வீரமரணத்தை தழுவியுள்ளார். 

இது அல்லாஹ்வின் ஏற்பாடு! அவர் ஏற்றுக் கொண்ட களத்தில் வெற்றியாளராக, கண்ணியமானவராக, அநீதிக்கெதிரான போராளியாக தளராமல் நின்று மரணத்தை தழுவியிருக்கிறார்.

பலர் அவருக்கு எதிராக வேலை செய்தபோதிலும் நாட்டிற்கு உதவி செய்யும் பணியில் மரணித்திருக்கிறார். சத்தியத்தை நிலை நாட்டும் பணியில் எந்த சமரசமும் இன்றி போராடும் பணியில் மரணித்திருக்கிறார்.முர்ஸியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி நஜ்லா மஹ்மூத் வழங்கிய செய்தி

மேலும் படிக்க

 

கிரிஷ் கர்னாட்: சமரசமில்லாத போராளி! 1938-2019

நானும் அர்பன்(நகர்ப்புற) நக்ஸல்தான்” என்ற அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு கவுரி லங்கேஷின் நினைவு தினத்தில் கலந்து கொண்ட கிரிஷ் கர்னாட்டின் முகத்தை யாரும் மறக்க முடியாது. மனித உரிமை ஆர்வலர்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி காவல்துறை கைது செய்த அடுத்த வாரம் (செப்டம்பர் 5, 2018) பெங்களூரில் நடந்த கவுரி லங்கேஷின் நினைவு தினத்தில்தான் கர்னாட் தனது எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்தார். “மீ டூ அர்பன் நக்ஸல்” என்ற பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த கிரிஷ் கர்னாட் நாட்டில் பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இயங்குபவர்களை அர்பன் நக்ஸல் என்ற பெயரில் முத்திரை குத்தி சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக களத்தில் நின்றவர்.

 மேலும் படிக்க

அலாவுதீன் கில்ஜி

அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றை அவரவர் விருப்பப்படி எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய நூல் ‘இந்தியாவின் கதை’ (சித்திரங்கள் ஜார்ஜ்கெய்ட்), தமிழாக்கம்: முல்லை முத்தையா, சென்னை ராஜேஸ்வரி புத்தகாலயம்’) இரண்டு ரூபாய் எட்டணா விலையில் 1956ல் வெளியிடப்பட்ட 148 பக்கங்களைக் கொண்ட நூல் அது. அதில் பக்கம் 82இல் வரும் செய்திகள் அப்படியே.

சித்தூர் வீழ்ச்சிக்குப் பின் அலாவுதீன் ஒரு இந்துப் பெண்மணியை மணந்து கொண்டான். அதைப் போலவே தன் மகனுக்கும் செய்து வைத்தான்.
அலாவுதீன் தனது வாழ்நாளில் இந்தியாவை ஒன்றுபடுத்தினான். பட்டாணியர்களின் கீழ், அரச பரம்பரையாக கில்ஜி வம்சத்தினரும் மற்றும் படையெடுத்து வந்தவர்களும், இந்தியாவைத் தங்கள் தாயகமாகக் கருதினர். சில இந்துக்களும், முக்கியமாக தாழ்த்தப்பட்டோரும் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவினர்.

மேலும் படிக்க

SDPI கட்சியின் முப்பெரும் விழா

சாசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 11ம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா ஜூன் 21 அன்று சென்னையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி..வி. தினகரன் எம்.எல்.ஏ., கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லக்கண்ணு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர், முஹம்மது முபாரக்

மேலும் படிக்க

தீயோருக்கு அஞ்சாதே

முஸ்தஃபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை முஸ்தஃபா வீட்டிற்கு வந்ததும் அப்துல் கரீம் அவரிடம் ஓட்டமாய் ஓடினான்.

‘அத்தா! நம்ம பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?’

கரீமின் உம்மா மதியமே தன் கணவருக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல், ‘என்னாச்சு?’ என்று விசாரித்தார் முஸ்தஃபா. மேலும் படிக்க

முஸ்தபா தம் குடும்பத்தினருடன் பயணத்திற்கு தயாராய் சென்னை விமான நிலையத்தில் நின்றிருந்தார். தம்முடைய பிஸினஸ் விஷயமாக அவர் பலமுறை விமானத்தில் பயணம் புரிந்திருக்கிறார். ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கு அதுதான் முதல் விமானப் பயணம். அதனால் பிள்ளைகள் இருவரும் பரபரப்புடன் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். ஆர்வமுடன் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

துபையில் முஸ்தபாவின் சகோதரி ரமீஜா தம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். துபை வந்து சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லும்படி தம் சகோதரருக்கு அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். ஆனால் முஸ்தபாவுக்கு நேரம் அமையாமல் இருந்தது. இம்முறை பிள்ளைகளின் பள்ளி விடுமுறையில் அதற்கு வாய்ப்பு ஏற்பட ஒரு வாரப் பயணமாக அவரும் குடும்பத்தினரும் கிளம்பிவிட்டனர்.

மேலும் படிக்க

Comments are closed.