புதிய விடியல் – 2019 ஜூலை 16-31

0

பாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் யூனிட்டி மார்ச் என்ற ஒற்றுமை அணிவகுப்பு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஜூன் 30 அன்று திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகரில் சிறப்பாக நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் நிறுவப்பட்ட தினமான பிப்ரவரி 17 அன்று ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இவ்வருடமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் அன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றன.

மேலும் படிக்க

அடிமைத்தனத்திற்கு அறுதி இல்லையா?

பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த வழக்கொழிந்துபோன ஒரு அநாகரீக கலாச்சாரமாகத்தான் அடிமைத்தனத்தை குறித்து சமகால சமூகம் பொதுவாக கருதுகிறது. “யாருமே அடிமைகளாக இருக்க மாட்டார்கள்: எல்லா விதமான அடிமைத்தனமும் அடிமை வியாபாரமும் அடியோடு ஒழிக்கப்படும்” என்று 1948ல் சர்வதேச மனித உரிமை மாநாட்டு பிரகடனம் கூறுகிறது.அடிமை வியாபாரத்தை ஒழித்ததற்கான நினைவு தினமாக வருடந்தோறும் ஆகஸ்டு 23  அன்று கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

ஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குஜராத் உயர்நீதி மன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி அமைச்சரவையில் 

மேலும் படிக்க

கருணை சேவை புரியும் கஃபீல் கான்!

உத்தர பிரதேசத்தைச் சார்ந்த மருத்துவர் கஃபீல் கானைக் கேள்விப்படாதவர்கள் மிகக் குறைவு என்ற அளவுக்கு அவர் புகழ் பெற்றிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தத் துயர நிகழ்வு நடந்தது உ.பி.யில். கோரக்பூரிலுள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக குழந்தைகள் மரணித்தன.

மூளை அழற்சி (Encephalitis) என்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்தக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் மருத்துவமனையில் இருப்பு இல்லாததால் குழந்தைகள் உயிர் இழக்க ஆரம்பித்தனர்.

மேலும் படிக்க

முர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்

முர்ஸி ஆட்சியின் கடைசி பத்து நாட்கள் வரலாற்றில் மன்னிக்க முடியாத பெரும் துரோகம் நிகழ்ந்த நாட்கள். முர்ஸி ஆட்சி அமைத்தது முதலே இராணுவ அமைச்சராக இருந்த அப்துல் பத்தாஹ் சீசி தனது அமெரிக்க சார்பு தன்மையோடும், ஹோஸ்னி முபாரக்கின் எச்சங்களை பின்பற்றியும் தனது காய்களை நகர்த்த துவங்கினார். இராணுவம் சம்பந்தமான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவையான உதவிகளை அமெரிக்க வெளியுறவுத் துறையிடமிருந்து  பெற்றுக் கொண்டார்.

ஜூன் 22, 2013  எகிப்தின் கலாச்சார மாநாட்டில் பங்கெடுத்த அப்துல் பத்தாஹ் சீசி தான் மேற்கொண்டுவரும் நகர்வுகளை மிகவும் நுணுக்கமாக 

மேலும் படிக்க

அலாவுதீன் கில்ஜி

கல்கத்தா இராமகிருஷ்ண மடத்திலிருந்து இந்தியப் பண்பாட்டு வரலாறு அதிகப் பக்கங்களில் ஆறு தொகுதிகளாக (1937இல் 3 தொகுதிகளாக) வெளிவந்துள்ளது. அதில் 2006இல் வெளிவந்த ஐந்தாவது தொகுதி டபுள் டிம்மி சைஸ் 839 பக்கங்களைக் கொண்டது. அதில் பக்கம் 497இல் பத்மினி கதை சொல்லப்படுகிறது. பத்மாவத் பற்றிய செய்தி வந்துள்ளது. ‘பத்மாவத் கதைப் பாடல் கொஞ்சமாக சரித்திரம் சேர்ந்துள்ளது. மீதி அனைத்தும் கதைதான்’ என்கிறது.

இந்தக் கதை முதலில் வெளியே தெரிந்தது மாமன்னர் அக்பர் காலத்தில். அவரது அவையில் 16ஆம் நூற்றாண்டில் இருந்த பதானியில் மேற்கோள் காட்டப்பட்டது. வட இந்தியாவில் கதை பரவலாக பிரசித்தி பெறத்துவங்கியது.  

மேலும் படிக்க

  1. கிளாடியேட்டர்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சூடு தகிக்கத் தொடங்கியது. 1960-ம் ஆண்டு தொடக்கத்தில், அடுத்த அதிபராக பதவி வகிக்கத் தகுதியானவர் யார்? என்ற கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்தது. ரிச்சர்ட் நிக்ஸன் அல்லது ஜான் கென்னடி… – இவர்களில் யார் அடுத்த அமெரிக்க அதிபர்? அமெரிக்க குடிமகன்களின் விவாதப் பொருள் இதுதான்.

அதேசமயம் அமெரிக்காவின் தென் பகுதியில் இனப் பிரச்சினை மீண்டும் பூதாகரமாக வெடித்தது. அதிபர் தேர்தலை முன்னிறுத்தி கறுப்பர்களின் போராட்டம் வலிய திணிக்கப்படுவதாக

மேலும் படிக்க

நிலவு பிளந்தது

மூஸா நபியின் காலத்தில் கடல் பிளந்த வரலாற்றைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அமர்ந்திருந்தார்கள் பிள்ளைகள். அவர்களிடம், “நம் ரஸூலுல்லாஹ் காலத்தில் நிலவு இரண்டாகப் பிளந்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் முஸ்தபா.

“நிலவு பிளந்ததா?” என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் கேட்டாள் ஸாலிஹா.

மேலும் படிக்க

தண்ணீர் விலை மதிப்பற்றது

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம்.(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா?” (அல்குர்ஆன் 56:68- 70)

தண்ணீர் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடை. பூமியின் மூன்றில் இரண்டு பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. அதைத் தவிர நதிகளும், நீரோடைகளும் பூமியின் நரம்புகளாக ஒழுகுகின்றன. உயிருள்ள அனைத்தையும் மேலும் படிக்க

Comments are closed.