புதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15

0

இன்றுவரை இந்திய குடிமகன்: நாளை?

அஸ்ஸாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி. ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஏறத்தாழ 19 இலட்சம் மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பட்டியல் வெளியானதில் இருந்து 120 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை இவர்கள் அணுகி தங்களை இந்திய குடிமகன் என்று நிரூபிக்க வேண்டும். அஸ்ஸாமில் தற்போது 100 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் உள்ளன. இன்னும் 1000 தீர்ப்பாயங்களை அரசாங்கம் விரைவாக அமைக்கவுள்ளது. இதில் பணி செய்யும் அனுபவமற்ற அதிகாரிகளிடம் இந்த மக்கள் தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தவறுபவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள். எத்தனை நாட்கள் அல்லது ஆண்டுகள் இவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள், அதற்கு பின் இவர்கள் எங்கு அனுப்பப்படுவார்கள் என்பது..

மேலும் படிக்க

ஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா?

ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்களின் போராட்டம் தொடருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கொடூரமாக தாக்கியும், மாணவர் தலைவர்களை கைது செய்தும் காவல்துறையும், அரசும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அன்றாடம் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய மாணவர்களை காவல்துறை கைது செய்து இழுத்துச் சென்றது. காவல்துறை நடத்திய தடியடியிலும், அத்துமீறலிலும் மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். போராட்டம் நடந்த பகுதியில் மின்சார விளக்குகளை..

மேலும் படிக்க

அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்

நவம்பர் 26, 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு, அரசியல் சாசன நிர்ணய அவை அங்கீகாரத்தை வழங்கியது. ஆனால், அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியும், அதன் தலைவர்களும் அரசியல் சாசன தத்துவங்களையெல்லாம் காலில் போட்டு மிதித்த காட்சி அரங்கேறியது. குடியரசு தலைவர், ஆளுநர், பிரதமர், உள்துறை அமைச்சர் என இந்தியாவின் உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள்..;

மேலும் படிக்க

இயல்பாக இருக்கிறதா கஷ்மீர்?

ஒரு மணிநேரம் இன்டர்நெட் இல்லாமல் வாழ முடியுமா?’’ என்று கேட்டால் ”நோ சான்ஸ்” என்று ஸ்மார்ட்போனில் இருந்து முகத்தை திருப்பாமல் பதில் சொல்வோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுடன் இன்று இணைய மற்றும் தொலைபேசி சேவைகளும் மக்களின் அன்றாட தேவைகளாக மாறிவிட்டன. ஆனால் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் இல்லாமல் ஆகஸ்ட் 4 முதல் கஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அந்த அந்தஸ்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அத்துடன் மாநிலத்தையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம். ஜம்மு கஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31 அன்று இந்திய ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டு புதிய இந்திய வரைபடத்தையும் மத்திய அரசாங்கம் வெளியிட்டது. ‘கிரீடத்தை இந்தியா இழந்துவிட்டது’ என்று தி டெலிகிராப் நாளிதழ் இதனை வர்ணித்திருந்தது. ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்..

மேலும் படிக்க

பாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு

பாபரி மஸ்ஜிதை குறித்த பொய்கள் கலந்த வரலாற்று புத்தகங்களுக்கு மாற்றாக ‘பாபரி மஸ்ஜித் கதை’ என்ற சித்திரக் கதை வெளிவந்துள்ளது. ஒரு கல்வி வளாகத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கூறுவதாக துவங்கும் கதை, இந்தியாவின் வரலாற்றை நோக்கி ஒளி வீசக்கூடியதும், போலியான பிராமணீய கட்டுக்கதைகளை மிக எளிதாக உடைப்பதாகவும் அமைந்துள்ளது. இந்தியாவில் நிலவிய நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஐரோப்பிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான இந்திய மக்களின் எதிர்ப்பு போர் குறித்தெல்லாம் மிக அழகாக சித்தரிக்கிறது. 

பின்னர் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து, குறிப்பாக பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு வழி வகுத்த சட்டவிரோதமாக ராமர் சிலைகளை மஸ்ஜிதுக்குள் வைத்தது, ரத யாத்திரை, இடஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பை மையமாகக் கொண்ட அரசியல் சூழல்கள் முதலானவை இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவில் மதச்சார்பற்ற சமூகத்திற்கு ஏற்பட்ட பலத்த அடியாக அமைந்தது கருப்பு …

மேலும் படிக்க

ரௌலட் மசோதாவிற்கு எதிர்ப்பு – 2

நீதிமன்றத்தில் வாதாடிய லஜபதிராய்

பஞ்சாபில் பிரிட்டிஷாரால் கொண்டு வரப்பட்ட நிலப்பிரிவுச் சட்ட திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, தண்ணீர்த் தீர்வையை உயர்த்தும் மசோதா போன்ற பல்வேறு கொடிய சட்டங்களால் விவசாயிகள் பெரிதும் துயருற்றனர். ராவல்பிண்டி, லாயல்பூர் விவசாயிகள் கொதித்தெழுந்தனர். கோதுமை விவசாயப் பகுதியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மனநிலை வேகமாக வளர்ந்தது. விவசாயிகளின் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும்படி..

 மேலும் படிக்க

  1. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்

புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக் கழக சட்டப் பள்ளி நிர்வாகிகள் என்னை மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். புளகாங்கிதம் அடைந்தேன். என் நினைவுகள் பின்னோக்கித் திரும்பின.

என் இளமைக் காலத்தின் தெருவோர வாழ்க்கையை மீட்டிப் பார்த்தேன்.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, லேன்சிங் பகுதியிலிருந்து அக்கா யெல்லா வசித்த பாஸ்டன் நகருக்கு நான் வந்த புதிதில், அந்த நகரைச் சுற்றிப் பார்த்து விடுமாறு அக்கா சொல்லியிருந்தார்..

மேலும் படிக்க

வெற்றியும் பணிவும்

தொலைக்காட்சியில் முஸ்தபாவும் குடும்பத்தினரும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது இறுதி மேட்ச். முடிவதற்கு வெகு சில பந்துகளே இருந்தன. வெற்றி பெற சில ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றது இந்திய அணி.

ஸாலிஹாவும் அப்துல் கரீமும் துள்ளிக் குதித்தனர். உற்சாகமாகக் கைதட்டி சிரித்தான்…

மேலும் படிக்க

சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்!

“பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வசதியற்றவர்கள்தாம் உங்கள் தர்மங்களுக்கு மிகவும் உரித்தானவர்கள் ஆவர். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்…

மேலும் படிக்க

Comments are closed.