புதிய விடியல் – 2019 நவம்பர் 01-15

0

பசிக்கும் இந்தியா!

சர்வதேச பட்டினி குறியீட்டில் 117 நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு வெளியான ஐரிஸ் உதவி நிறுவனமான கன்ஸேன் வேல்ட் வைடு (நீஷீஸீநீமீக்ஷீஸீ கீஷீக்ஷீறீபீ கீவீபீமீ) மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபேவும் (கீமீறீt பிuஸீரீமீக்ஷீ பிவீறீயீமீ) இணைந்து தயாரித்த அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, ஐந்து வயதுக்கு கீழான குழந்தைகளின் குறைவான எடை, வளர்ச்சி பாதிப்பு, குழந்தை மரணவிகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டினி குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளின் எடைக்குறைவு 2008–2012 காலக்கட்டத்தில் 16.5 சதவீதமாக இருந்தது. 2014–2018 காலக்கட்டத்தில் 20.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச பட்டினிக்குறியீட்டில் இலங்கை (66-வது இடம்), மியான்மர் (69), நேபாளம் (74), பாகிஸ்தான் (94), வங்காளதேசம் (88) முதலான நாடுகளுக்கு… 

மேலும் படிக்க

இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு

நீதி நிலைபெறுமா?

பாபரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திர சூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக கடந்த ஆகஸ்ட் 6ம். தேதி முதல் தினசரி நடைபெற்று வரும் இவ்வழக்கு வழக்கு விசாரணை குறித்து பெரும்பான்மையினர் மௌனம் காப்பதால் வழக்கு விசாரணையின் முழு விபரங்களையும் வாசகர்களுக்கு வழங்குகிறோம். முதல் இரண்டு பகுதிகள் செப்டம்பர் 16-30 மற்றும் அக்டோபர் 01–15 ஆகிய இதழ்களில் வெளி வந்தன. மூன்றாம் பகுதி இந்த இதழில் வெளியிடப்படுகிறது. -ஆசிரியர்….

மேலும் படிக்க

நிழல் இராணுவங்கள்

மத்தியில் -மீண்டும் ஆட்சியில் வீற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் குண்டர் படைகள் குறித்தான ஒரு நீண்ட கள ஆய்வின் மூலமாகவும் சந்திப்புகள், சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் வழக்குகளின் பின்புலங்களை வைத்து இந்துத்துவத்தின் கட்டமைப்பு கொண்ட தேசவிரோத இயக்கங்களின் வலை பின்னல் குறித்து விவரிக்கின்றார் எழுத்தாளர் திரேந்திர கே. ஜா. இவர் இதற்கு முன் பாபரி மஸ்ஜித் குறித்தான ‘அயோத்தியா தி டார்க் நைட்’ என்கிற நூலை இணைந்து எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பின்புலம் கொண்ட அமைப்புகளையும், அதன் சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொண்டு தன்னிச்சையாக …

மேலும் படிக்க

DADA-வை NIGHT WATCHMAN ஆக்கிய அமித்ஷா

லோதா கமிட்டி. இந்தப் பெயரைக் கேட்டதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். 2013-ம் ஆண்டில் ஐ.பி.எல். சூதாட்டத்தால் இந்திய கிரிக்கெட்டின் மீது விழுந்த கறையை நீக்க, நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டியை, ஜனவரி 2015-ல் உச்சநீதிமன்றம் நியமித்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் பண மோசடி செய்த லலித் மோடி-யின் ‘சாகசங்கள்’ ஒன்றே போதும் பி.சி.சி.ஐ-.யின் பெரு மதிப்பை புரிந்து கொள்ள…

அருண் ஜெட்லி முதல் அனுராக் தாகூர் வரை, சரத்பவார் முதல் சீனிவாசன் வரை பி.சி.சி.ஐ. பதவிகளுக்கு அடித்துக் கொள்வதற்கு காரணமே அங்கு குவிந்திருக்கும் கரன்சிகள்தான். கிரிக்கெட் உலகில் பி.சி.சி.ஐ. தான் பெரியண்ணன்… 

மேலும் படிக்க

சமரசமில்லா போராளி SAR ஜீலானி

அதிகாரத்தில் உள்ளவர்களின் அத்துமீறல்களை அச்சமின்றி கேள்வி எழுப்புபவர்களின் இறந்த உடல் கூட அதிகார போதை ஏறியவர்களுக்கு உதறல்களை  உண்டாக்கும் என்பதற்கு வரலாறும் சம காலமும் சான்றுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் கஷ்மீர் பேராசிரியர் சையத் அப்துர் ரஹ்மான் ஜீலானி. அக்டோபர் 24 அன்று டெல்லியில் உடற்பயிற்சி கூடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த அவரின் உடலை குடும்பத்தினரிடம் உடனடியாக ஒப்படைக்காமல் தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்தினர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் கஷ்மீர் பேராசிரியரான ஜீலானி, நாட்டையே உலுக்கிய, இதுவரை விடை தெரியாத நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். மேல்முறையீட்டில் டெல்லி …

மேலும் படிக்க

அலாவுதீன் கில்ஜி

இரஜபுத்திரர்களை வென்று இராஜஸ்தானை நிரந்தரமாக டில்லியுடன் இணைத்து ஆட்சி செய்யவே அலாவுதீன் கில்ஜி போர் ஏற்பாடுகளைச் செய்தார் என்பதை நாம் திடமாகக் கூற இயலாது.

இராஜஸ்தானிலிருந்த ஒரு சில பகுதிகளை மட்டுமே அவர் தில்லியுடன் இணைக்க முயற்சித்தார். அம்முயற்சியும் தோல்வியுறவே அந்த எண்ணத்தை முற்றிலுமாக அலாவுதீன் கில்ஜி கைவிட்டார். அவர் காலத்தில் இராஜஸ்தான் முக்கியமான இடத்தைப் பெற்றிராமையே அலாவுதீன் கில்ஜியின் புறக்கணிப்பிற்கு ஒரு காரணம் ஆகும். இராஜஸ்தானத்து கொள்கையால் பெரும் பொருள் நஷ்டம்; போர் ஏற்பாடுகளுக்குப் பெரும்..

மேலும் படிக்க

  1. தேகமா? அழித்து விடு!

பாட்ரிஸ்-க்கு நன்றி. ஒருவேளை அவர் வருவார் என்றால், பாம்பை சமைத்துக் ‘‘பாட்ரிஸ்க்கு… கொடுப்போம்.’’ இப்படித்தான் காங்கோவின் கட்டாங்கா நகரிலிருந்து, அமெரிக்காவின் லாங்லி நகரில் இருக்கும் சி.ஐ.ஏ. தலைமையகத்துக்கு தந்தி வந்தது.

“சார்”

‘‘யெஸ் சொல்லுங்க மிஸ்டர் லாரி” அதிகாரம் மிகுத்த வார்த்தைகளில் கேட்டார் சி.ஐ.ஏ. இயக்குநர் டல்லஸ்

மேலும் படிக்க

தீயோருக்கு அஞ்சாதே

புறநகரில் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு தம் குடும்பத்தினருடன் சென்றிருந்தார் முஸ்தபா. அவருடைய அலுவலக நண்பர் தமக்கு வேலையில் புரமோஷன் கிடைத்ததை முன்னிட்டு, நெருங்கிய குடும்ப நண்பர்களுக்கு அங்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்து, அதுவும் புதிய ஹோட்டலில் என்றதும் ஸாலிஹாவும் அப்துல் கரீமும் மிகவும் உற்சாகமாகிவிட்டனர்.

அந்த ஹோட்டல் நவீன வடிவமைப்புடன் அழகாய் அமைந்திருந்தது. அது முஸ்லிம்களின் ஹோட்டல் என்பதால் அனைவரும் தொழுவதற்கு தனியாகத் தொழுகைக் கூடமும் இருந்தது. விருந்தினர்கள்…

மேலும் படிக்க

முஸ்லிமல்லாத நண்பர்கள்

‘‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 60:8)

இஸ்லாமிய கொள்கை சமூகத்திற்கு எல்லா காலக்கட்டங்களிலும் எதிரிகள், நண்பர்கள் என இரண்டு வகையான… 

மேலும் படிக்க

Comments are closed.