புதிய விடியல் – 2019 பிப்ரவரி 01-15

0

பணக்காரர்களின் கைகளில் தேசம்!

சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் சோசியலிசத்தை அடிப்படை தத்துவமாக அங்கீகரித்த தேசம் இந்தியா.1976ல் இந்திரா காந்தி அரசு அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் இந்தியாவை சோசியலிச குடியரசாக மாற்றியது. ஆனால், சோசியலிச பிரகடனத்திற்கு பின் நாற்பது ஆண்டுகள் கடந்த பிறகும் சமூகத்தில் பொருளாதார சமமின்மை சிறிதளவு கூட குறையவில்லை. மாறாக பணக்காரர்கள்– ஏழைகள் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் அண்மைய ஆதாரம்தான் சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெறவிருக்கும் உலக பொருளாதார பேரவையின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை.
முழுவதும் படிக்க

கேள்விக்குறியாகும் சமூக நீதி!

ஜனவரி 7, 2019 அன்று மத்திய அமைச்சரவை, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியது. மறுதினம் மக்களவையில், அரசியல் சாசன 124வது திருத்தம், 2019 என்றழைக்கப்பட்ட இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 9 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஜனவரி 12 அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்க அது சட்டமாகியது. பிப்ரவரி 1 முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அவசர அவசரமாக அறிவித்தது. சுதந்திர இந்தியாவில் எந்த மசோதாவும் இவ்வளவு வேகமாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். முழுவதும் படிக்க

தொடர்கள்

அலாவுதீன் கில்ஜியின் துவக்க கால ஆட்சியில் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் நடந்தன. கி.பி. 1299இல் நஸ்ரத் கான் தலைமையில் குஜராத் மீது படையெடுப்பை நடத்திட உத்தரவிட்டார். இப்படையெடுப்பு குறித்து முன்பே விளக்கியுள்ளோம். குஜராத் படையெடுப்பின் போது கிடைத்த பொருட்களின் பெரும் பகுதியை படைவீரர்களே மறைத்து வைத்துக் கொண்டனர். சுல்தானுக்குச் சேர வேண்டிய பொருளைக் கேட்டதால் படையில் கலகம் ஏற்பட்டது. அதில் புதிதாக வந்த முஸ்லிம்கள் பெருவாரியாக ஈடுபட்டனர். முஹம்மது ஷா, கப்ரூ, யல்ஹக், புர்ராக் ஆகியோர் தாங்கள் அபகரித்த பொருட்களை அலாவுதீன் கில்ஜியிடம் சேர்க்க மறுத்தனர். இன்னும் பல புதிய முஸ்லிம்கள் இதே நிலையில் இருந்தனர். இது குறித்த விவரங்களை யஹியா தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். (Yahya, Tariki-iMukarak Shalu. Page 76) அலாவுதீன் கில்ஜிக்குச் சேர வேண்டிய பொருட்களை அபகரிக்க முயன்ற அனைவரும் கடுமையான முறையில் தண்டிக்கப்பட்டனர்.

முழுவதும் படிக்க

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் நிர்வாக வசதிக்காக, நாங்கள் நிர்மானித்த பள்ளிவாசல்களுக்கு எண்கள் வழங்கப்பட்டது.

நான் பாஸ்டன் நகரில் உருவாக்கிய மசூதியின் எண் 11. ஏறக்குறைய பாஸ்டனில் நான் ஆறு மாதங்கள் தங்கி, இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டு பள்ளிவாசலை உருவாக்கினேன். 1954-ம் ஆண்டு மார்ச் மாதம், பிலடெல்பியா பகுதிக்குச் செல்லுமாறு தலைவர் எலிஜா முஹம்மது எனக்கு கட்டளையிட்டார்.

பாஸ்டனைப் போல அல்லாமல், பிலடெல்பியா பகுதி கறுப்பர்கள் விரைவிலேயே என்னுடைய பிரச்சாரத்திற்கு பதில் அளித்தனர். வெள்ளையர்களின் வரலாற்றுத் துரோகத்தை புரிந்து கொண்ட அவர்கள், இஸ்லாம்தான் கறுப்பர்களின் பூர்வீக மதம் என்பதையும் உணர்ந்து கொண்டனர். மே மாத இறுதிக்குள் பிலடெல்பியாவில் 12-ம் எண் பள்ளிவாசலை உருவாக்கினேன். முழுவதும் படிக்க

மூத்த பத்திரிகையாளர் வி.டி. ராஜசேகருக்கு முகுந்தன் சி. மேனன் விருது

மனித உரிமை களத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் மூத்த பத்திரிகையாளரும் தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியருமான வி.டி.ராஜசேகருக்கு 2018ஆம் ஆண்டிற்கான முகுந்தன் சி. மேனன் விருது வழங்கப்படும் என்று தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு National Confederation of Human Rights Organisations (NCHRO) அறிவித்துள்ளது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தேசிய தலைவர் பேரா. அ. மார்க்ஸ் மற்றும் பொதுச் செயலாளர் பேரா. கோயா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தனர். ஒவ்வொரு வருடமும் மனித உரிமை களத்தில் போராடி வரும் தனிநபர்களுக்கு அல்லது இயக்கத்திற்கு என்.சி.ஹெச்.ஆர்.ஓ. இந்த விருதை வழங்கி வருகிறது. இந்த விருதை பெறும் 13வது நபர் வி.டி. ராஜசேகர். முழுவதும் படிக்க

கேம்பஸ் ஃப்ரண்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுக்குழு 27.01.2019 அன்று மதுரையில் ‘சகிப்பின்மைக்கு விடைகொடுப்போம், ஃபாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்‘ என்ற முழக்கத்தோடு மாநில தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவை தேசிய துணைத்தலைவர் அப்துர் ரஹீம் துவக்கிவைத்தார். இதன் பின்னர் ஆண்டறிக்கையை மாநில பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ். இஸ்மாயில் மற்றும் தமிழ் மாநில குழு உறுப்பினர் அமீர் பாஷா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். முழுவதும் படிக்க

கேஸ் டைரி

  • இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை: ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்து நாடகமாடிய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்!
  • பா.ஜ.க. அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
  • புனே இளைஞர் முஹ்சின் ஷேக் கொலை வழக்கு: இந்து ராஷ்டிர சேனா தலைவர் தனன்ஜெய் தேசாய்க்கு பிணை
  • நரோடியா பாட்டியா வழக்கு: நால்வருக்கு பிணை!

விரிவாக படிக்க

யார் இந்த தேவதை?

அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய நேரம். தம் அறையில் ஓய்வாகச் சாய்ந்து, புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் முஸ்தஃபா. அடுத்த அறையில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கரீமும் ஸாலிஹாவும்அத்தா, அத்தாஎன்று கத்திக்கொண்டே உள்ளே ஓடி வந்தார்கள்.

எனக்கொரு டவுட்என்றாள் ஸாலிஹா.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உயர்ந்த புருவங்களுடன் அவர்களைப் பார்த்தார் முஸ்தஃபா. ‘அத்தா. ஆண் தேவதை இருக்கிறார் தானே?’

தேவதை பெண் தானே அத்தா? எங்க ஸ்கூல் டிராமாவில் பார்த்திருக்கிறேன். தலையில் கிரவுன், வெள்ளையா நீளமா டிரஸ், கையில் ஒரு ஸ்டிக். தேவதை அப்படித்தானே அத்தா இருக்கும்என்றான் கரீம்.

பெரிதாய் மூச்சுவிட்டு, பிள்ளைகளைப் பார்த்தார் முஸ்தஃபா. சிறிது யோசனைக்குப்பின் கேட்டார். ‘தேவதை என்றால் இங்கிலீஷில் என்ன?’

ஏஞ்சல்என்றாள் ஸாலிஹா.

கரெக்ட். நாம பொதுவா டிவியில், சினிமாவில் பார்க்கும், புக்ஸில் படிக்கும் தேவதைகள், ஏஞ்சல்களெல்லாம் கரீம் சொன்னதைப் போல்தான் இருப்பார்கள். ஏனென்றால் முஸ்லிம் அல்லாதவர்கள் பெண் கடவுள்களைத் தேவதைகளாகப் பார்க்கிறார்கள். அதனால் அழகான பெண்களை, பெண் குழந்தைகளை தேவதை என்று சொல்கிறார்கள், கொஞ்சுகிறார்கள்.’

அப்ப முஸ்லிம்ஸுக்கு ஏஞ்சல் இல்லையா? ஆண் தேவதையும் இல்லையா?’ என்று கேட்டாள் ஸாலிஹா.

முழுவதும் படிக்க

உறவுகளின் புனிதம்

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்).- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 4:1)

முழுவதும் படிக்க

Comments are closed.