புதிய விடியல் – 2019 பிப்ரவரி 16-28

0

மத்திய மக்கள் பட்ஜெட்…?

ஐந்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஏழை, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் எனப் பிரச்சாரப்படுத்தப்படுகிறது. ஆனால், இது இடைக்கால பட்ஜெட் என்பதனை நம்மில் பலர் நினைவில் கொள்ளவில்லை. ‘இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததில் நாடாளுமன்ற மரபுகளை மத்திய பா.ஜ.க அரசு தகர்த்துள்ளது. ஆட்சிக் காலம் நிறைவடையும் நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார மேடையாக பட்ஜெட் தாக்கல் நிகழ்வினை பா.ஜ.க. மாற்றியுள்ளது’ என்பது நடுநிலையாளர்கள் கருத்து.

சரி… இந்த பட்ஜெட் கடந்த காலங்களை விட சிறந்த பட்ஜெட்டா, நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட்டா என்பது குறித்தும் ஆராயவேண்டியது அவசியமாகிறது. மேலும் படிக்க

எங்கே எனது வேலை?

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’’ என்று சூளுரைத்தார். இது போன்ற காதுகளை குளிரச் செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கும் வந்தது. தற்போது அதன் ஐந்தாண்டுகால ஆட்சி முடியும் நிலையில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிபரம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த புள்ளிவிபரம் வெளியே வரக் கூடாது என்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிகளை எடுத்தது என்ற செய்தி அதைவிட அதிக அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் படிக்க

ஜோரம் வான்: வெறுப்பிலிருந்து இஸ்லாத்தை நோக்கிய பயணம்

அன்று வரை உமர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதப்படுவதை நேரடியாக கேட்டிருக்கவில்லை. ஹம்ஸா (ரலி) இஸ்லாத்தை தழுவியபோது உமர் தீர்மானித்துவிட்டார், இனி முஹம்மதை (ஸல்) சும்மா விடக்கூடாது. குறைஷிகளில் சிலர் தங்களது பாரம்பரியத்தை கைவிட்டு களம் மாறுகிறார்கள். தங்களுடைய ஒற்றுமையையும், முன்னோர்களின் நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயங்களையும் முஹம்மது புறக்கணிக்கிறார். தங்களுடைய தெய்வங்களை ஒழிக்கப்பார்க்கிறார். -குறைஷிகளின் இந்த குற்றச்சாட்டுகள் உமரை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருந்தது. மேலும் படிக்க

அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

உலகில் வேறு எந்த நூலுக்கும் காணப்பட முடியாத ஏழு தனிப்பெரும் பண்புகள் அல்குர்ஆனுக்கு உள்ளன. அதில் ‘அல்குர்ஆன் ஒரு தெய்வீக நூல்’ என்ற முதலாவது பண்பை புதிய விடியல் ஜனவரி 1&15, 2019 இதழில் கண்டோம். இந்த இதழில் அதன் இரண்டாவது தனிப்பெரும் பண்பை காண்போம்.

பாதுகாக்கப்பட்ட நூல்

அல்குர்ஆன் முழுமையாக இறைவனால் பாதுகாக்கப்படும் ஓர் இறைவேதம் என்பது அதன் தனித்துவங்களில் ஒன்றாகும். முந்தைய இறைவேதங்களை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்காமல் அக்கால மக்களிடமே வழங்கியிருந்தான். அதனைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“அல்லாஹ்வுடைய வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.” (அல்மாஇதா : 44) மேலும் படிக்க

சூடானில் வசந்தம் வீசுமா?

எளிய மக்களின் உணவான ரொட்டியின் விலை ஒரு சூடானிய பவுண்டில் இருந்து மூன்று சூடானிய பவுண்ட்களாக உயர்ந்தது சூடானில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடும் பண நெருக்கடியும் அதிகரிக்கும் பண வீக்கமும் டாலருக்கு நிகரான சூடான் பவுண்டின் விலை சரிந்து வருவதும் சேர்ந்துகொள்ள மக்கள் அலை அலையாக வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய போராட்டம், 1989 இல் இருந்து நாட்டின் அதிபராக இருக்கும் உமர் அல் பஷீர் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை நோக்கி திரும்பியுள்ளது. பண தட்டுப்பாடு அதிகரித்து மக்கள் தங்களின் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாத நிலையில், முன் பணம் கட்டினால்தான் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை கூட பெற முடியும் என்ற நிலைப்பாடு மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது. மேலும் படிக்க

ஷேக் நசீர் உத்தீன்

ஷேக் நசீர் உத்தீன் கி.பி. 1276-1277இல் அவுத்தில் பிறந்தவர். கி.பி. 1356 வரை வாழ்ந்தவர். தனது 43வது வயதில் நிஜாமுத்தீன் அவுலியாவைச் சந்தித்து அவரது இருப்பிடத்திலேயே சேர்ந்தார். அவர் கைர் உல் மஜாலிஸ் என்னும் நூலை எழுதியுள்ளார். இஸ்லாமிய சூபிகளைப் பற்றிக் கூறும் அந்த நூலில் பெரோஸ் ஷா துக்ளக் (1351-1386) ஆட்சியின் போது ஒரு நாள் ஷேக் நசீர் உத்தீன், காஜி ஹமீதை அவுத்தில் சந்திக்க நேர்ந்தது. உடனே அவர் தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார்.

விருந்து நிறைவேறியதும், மற்றவர்கள் சென்றபின் அலாவுதீன் கில்ஜி பற்றிய அரிய தகவல் ஒன்றை ஷெய்க் நசீர் உத்தீனுக்கு காஜி ஹமீத்கான் எடுத்துரைத்ததை தனது கைர் உல் மஜாலிஸ் பாரசீக நூலில் பக்கம் 231இல் சொல்லியுள்ளார். மேலும் படிக்க

22. Fruits Of Islam (FOI) தொண்டர் படை

நான் சந்தித்து வந்த இடர்களை முடிவுக்கு கொண்டு வர ஒரு வழியே இல்லையா என்பதைச் சுற்றியே என் சிந்தனை ஓடியது.

அமெரிக்க கறுப்பர்களின் பிரச்சினைக்கு தீர்வு தனி நாடும், இஸ்லாமும்தான் என்று நேஷன் ஆஃப் இஸ்லாம் பிரச்சாரம் செய்கிறது. இது தீர்வல்ல என்று கருதும், குடியுரிமைகளுக்காகப் போராடும் கறுப்பின தேசியவாதக் குழுக்கள் எங்கள் பிரச்சார வீச்சுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்ந்தேன். இப்படி கறுப்பர்களின் முன்னேற்றத்துக்காக, நலனுக்காக செயல்படும் சமூக இயக்கங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு சாத்தியமே இல்லையா என்று சிந்திக்கும் போது, வழக்கம் போல வரலாற்றின் பக்கம் என் கவனத்தை திருப்பினேன். மேலும் படிக்க

தீயோருக்கு அஞ்சாதே

முஸ்தஃபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை முஸ்தஃபா வீட்டிற்கு வந்ததும் அப்துல் கரீம் அவரிடம் ஓட்டமாய் ஓடினான்.

‘அத்தா! நம்ம பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?’

கரீமின் உம்மா மதியமே தன் கணவருக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல், ‘என்னாச்சு?’ என்று விசாரித்தார் முஸ்தஃபா. மேலும் படிக்க

எறும்புகளிடம் காணப்படும் சமூக பாடங்கள்

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கிவிடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று. (அல்குர்ஆன் 27:18)

சுலைமான் நபி (அலை) அவர்கள் தனது சாம்ராஜ்ஜியத்தை பாதுகாப்பதற்கு தேவையான படைகளுடன் ஒரு பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அருகில் ஒரு எறும்பு தனது சமூகத்தாரிடம் நடத்திய ஆச்சரியமான உரையாடலை அல்லாஹ் சுலைமான் நபி (அலை) அவர்களுக்கு கேட்கும்படி செய்தான். அதைத்தான் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் படிக்க

Comments are closed.