புதிய விடியல் – 2020 பிப்ரவரி 01-15

0

காவல்துறை அரங்கேற்றும் பயங்கரவாதம்?

ஜனவரி 11 அன்று கஷ்மீரின் குல்காம் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் நவீத் பாபுவை அவரின் கூட்டாளி அல்தாஃப் மற்றும் வழக்கறிஞர் இர்பான் அகமது மிர் ஆகியோருடன்  காவல்துறை கைது செய்தது. தலைநகர் டெல்லிக்கு செல்ல அவர்கள் தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக கஷ்மீர் காவல்துறை தெரிவித்தது. சமீபத்தில் வெளி மாநிலங்களை சார்ந்த தொழிலாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் நவீத் மீதுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். குடியரசு தினத்திற்கு…​

மேலும் படிக்க

அவசர பிரிவில் ஜனநாயகம்!

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்று நமது இந்தியாவை குறித்து நாம் பெருமை பேசுகிறோம். ஆனால், இனி அவ்வாறு உரிமை கோர முடியாத அளவுக்கு தேசத்தின் சூழல் மாறிவிட்டதாக அண்மையில் வெளிவந்துள்ள ‘தி எக்னாமிஸ்ட் இண்டலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. 2019ம் ஆண்டில் உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கிய நாடுகளுக்கான தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51வது இடத்திற்கு பின் தங்கி உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஜனநாயக பின்னடைவின் முதன்மைக் காரணம் நாட்டில் சிவில் உரிமைகள் பாதிக்கப்பட்டது தான் என்கிறது அந்த அமைப்பு. தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம்; அரசாங்கத்தின் செயல்பாடு; அரசியல்…

மேலும் படிக்க

சி. ஏ. ஏ சியோனிச சட்டத்தின் நகல்!

நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அதிகமாக சுற்றுப்பயணம் செய்த நாடு இஸ்ரேல். அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமரும் மோடி ஆவார். 2017ல் மோடி இஸ்ரேலுக்கு சென்றதை, நெதன்யாகு மோடி லவ் ஃபெஸ்ட் என்று சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன. இந்த சந்திப்பின்போது நெதன்யாகு உதிர்த்த ஒரு வாக்கியம் இன்று நினைவுக்கூரத்தக்கது.

இந்த உறவு சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது” என்று அவர் கூறினார். சுவர்க்கம் என்பது ஒரு ராஜதந்திர வார்த்தை அல்ல. அது நம்பிக்கை ரீதியான, குறைந்தபட்சம் மதரீதியான ஒரு கோட்பாடு ஆகும்.

இந்தியாவில் குடியுரிமை…

மேலும் படிக்க

43- சென்னை புத்தகக் காட்சியில் இலக்கியச்சோலை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் நடத்தப்பட்ட 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை, ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். 750 அரங்குகள், பல்வேறு தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் மற்றும் 3 ஆயிரம் சதுரஅடியில் தொல்குடி தமிழர் நாகரிக வரலாற்றை பறைசாற்றும் கீழடி அரங்கு என பல்வேறு ஏற்பாடுகளுடன் களைகட்டியது புத்தகக் காட்சி. இந்த புத்தகக் காட்சியை 13 இலட்சம் பேர் பார்வையிட்டதாகவும், 60 இ லட்சம் புத்தகங்கள் விற்பனையானதாகவும் கூறியுள்ள பபாசி, இதன்மூலம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

புதிய புத்தாக்க சிந்தனைகளுடன் இயங்கி வரும் இலக்கியச் சோலை பதிப்பகமும் 22வது ஆண்டாக சென்னை புத்தக கண்காட்சியில் பங்கேற்றது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்த..

மேலும் படிக்க

இந்திய ஜனநாயகம் சந்திக்கும் நெருக்கடிகள்!

ஜனநாயகம் என்பதை சில சடங்குகளாகவே புரிந்துவைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் காலக்கட்டத்தில் தற்காலிகமாக, பெரும்பாலும் எந்தவொரு அடிப்படை கோட்பாடுகளும் இல்லாமல் உருவாகும் கூட்டணிகள், சுவரொட்டிகள், கோஷங்கள், விளம்பரங்கள்…- இந்த சடங்குகள் மட்டுமே ஜனநாயகமாக கருதப்படுகிறது. ஜனநாயகம் என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது தேர்தல் மட்டுமா? அல்லது இரண்டு தேர்தல்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளா? உண்மையில் ஜனநாயகத்தை தீர்மானிப்பது தேர்தல் அல்ல.இரண்டு தேர்தல்களுக்கு மத்தியில் நிகழும் சம்பவங்களே தீர்மானிக்கின்றன. ஜனநாயகத்தை ஒரு அரசு, அதன் பிரதிநிதிகள், அதன் தலைவர்கள் எவ்வாறு அணுகுகின்றனர்? எந்த நோக்கத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பயன்படுத்துகிறார்கள்? அல்லது துஷ்பிரயோகம்…

மேலும் படிக்க

எல்லா நம்பிக்கைகளும் பலன் தராது!

“(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை.- எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்;.இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான். ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும்…

மேலும் படிக்க

சிஏஏவிற்கு எதிரான மாணவர்களின் களம்!

மக்களை வீதிக்கு வரவழைத்துப் போராட வைத்தது தான் இந்த ஆட்சியாளர்களின் மிகப்பெரிய சாதனை. ஜனநாயக விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இங்கே 

மேலும் படிக்க

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கவர்னர் மாளிகை பேரணி

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மதரீதியிலான குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டி தினந்தோறும் நாட்டின் எல்லா பகுதிகளிலும் மிகுந்த எழுச்சியுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் …

மேலும் படிக்க

Comments are closed.