புதிய 100 ரூபாய் நோட்டுக்களை ATM இல் வைப்பதற்கு வங்கிகளுக்கு 100 கோடி ரூபாய் செலவாகும்

0

புதிய 100 ரூபாய் நோட்டுக்களை ATM இல் வைப்பதற்கு வங்கிகளுக்கு 100 கோடி ரூபாய் செலவாகும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து பல்வேறு மதிப்பிலான ரூபாய்த் தாள்கள் வடிவம் மாற்றப்பட்டு புதிய ரூபாய்த் தாள்கள அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நூறு ரூபாய்த் தாள்களை வங்கி ATM எந்திரத்தில் பயன்படுத்த வங்கிகளுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இந்த மாற்றங்களை ATM எந்திரங்களில் அமல் படுத்த வெகு காலம் ஆகும் என்றும் இந்த மாற்றத்தின் போது பண நெருக்கடி ஏற்படாதவாறு அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று ATM பராமரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒட்டி அரசு அறிமுகப்படுத்திய புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை ATM எந்திரத்தில் வைப்பதற்கு பெரும் தாமதம் ஆனது. இதனால் மக்கள் கையில் பணம் இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த புதிய நூறு ரூபாய் தாள்கள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டதும், ஹிட்டாசி பேமண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் லோனி அந்தோணி, இந்த புதிய ரூபாய் தாள்களுக்கு ஏற்ப நாடு முழுவதிலும் உள்ள 2.4 லட்சம் ATM களில் மாற்றம் செய்ய சுமார் நூறு கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் இதற்கு சுமார் ஒரு வருட காலம் பிடிக்கும் என்றும் ஏற்கனவை அறிமுகப்படுத்தப்பட்ட 200 ரூபாய் தாள்களுக்கான மாற்றம் இன்னும் முடிவடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வங்கிகளுக்கு உள்ள குழப்பம் என்னவெனில் இனி புதிய மற்றும் பழைய 100 ரூபாய் தாள்கள் ஒரே வேலையில் புழக்கத்தில் இருக்கும் என்பது தான். இதனால் ATM எந்திரங்களில் எப்படியான மாற்றம் செய்வது எனப்து தொடர்பாக குழப்பம் எழுந்துள்ளது. முன்னர் 500 மற்றும் 1000 ரூபாய் பழைய தாள்கள் முற்றாக தடுக்கப்பட்டு புதிய ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 200 ரூபாய்யும் புதிதாகவே அறிமுகம் செய்யப்பட்டது. அதனால் இந்த குழப்பம் எழவில்லை. ஆனால் 100 ரூபாய்யை பொறுத்தவரை பழை ரூபாய் தாள் தற்போதும் புழக்கத்தில் இருக்க புதிய தாள் அறிமுகப்படுத்துவது இந்த நிருவங்களுக்கு பெரும் சவாலாகியுள்ளது.

Comments are closed.