புதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்!

0

பத்திரிகை செய்தி

புதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்! கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 14.07.2019 அன்று இரவு இந்து முன்னணியை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மதவெறி கும்பல் ஒன்றிணைந்து அங்குள்ள முஸ்லிம் கடைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலையும் கற்கள் வீசி தாக்கியுள்ளனர். அவர்களுக்குள்ளே கைகலப்பில் ஈடுபட்டு விட்டு முஸ்லிம் கடைகள் மற்றும் பள்ளிவாசலை குறிவைத்து தாக்கியுள்ளனர். கடையில் வேலை செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆலங்குடி வர்த்தக சங்கமும் இந்த தாக்குதலை கண்டித்து கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இரண்டாவது முறை மோடி பதவி ஏற்ற பின்பு தேசம் முழுவதும் RSS ன் கும்பல் படுகொலைகளும், ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்லி முஸ்லிம்களை தாக்குவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது. இது போன்ற சூழ்நிலையை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான சதித்திட்டதின் வெளிப்பாடுதான் இது போன்ற தாக்குதல் என்பதை காவல்துறையும், தமிழக அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியை சார்ந்த அனைவர் மீதும் கடும் சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆலங்குடி பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு

அ.முஹைதீன் அப்துல் காதர்,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.