புத்திசாலித்தனமாக வாக்களிக்க 150 விஞ்ஞானிகள் வாக்காளர்களுக்கு வேண்டுகோள்

0

“மக்களை ஏமாற்றி, தாக்கும் ஆட்களை” நிராகரித்து, “சமத்துவமின்மை, அச்சுறுத்தல், பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக” வாக்களிக்க வேண்டும் என 150 விஞ்ஞானிகள் வாக்காளார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய கலாசார மன்ற தலைமையில் அமைக்கப்பட்ட மேல்முறையீட்டில், கல்வியாளர்கள், ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோருடன் இணைந்து, பொது நிறுவனம் முதல் தனியார் நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள், இந்திய கல்வி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER), இந்திய புள்ளிவிவர நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.), அசோகா பல்கலைக்கழகம், உயிரியல் அறிவியல் தேசிய மையம் (NCBS), மற்றும் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) போன்ற நிறுவனைங்களில் உள்ளிட்டோர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

“மதம், சாதி, பாலினம், மொழி அல்லது பிராந்தியத்தின் காரணமாக மக்களுக்கு எதிரகவும், மக்களை ஏமாற்றி தாக்கும் நபர்களை நாம் நிராகரிக்க வேண்டும். தொந்தரவு, அச்சுறுத்தல், சிறையில் அடைக்கப்படக்கூடிய வழக்கில் உள்ளவர், கொலை செய்யப்பட்டவர் ஆகியோர்கள் எதிர்காலத்தில் நம் நாட்டிற்கு தகுதியற்றவர் அல்ல. அத்தகைய சூழலை ஊக்குவிப்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும். புத்திசாலித்தனமாக வாக்களிப்பது அனைத்து குடிமக்களுக்கும் கட்டாய கடமை.

விஞ்ஞான கோட்பாட்டிற்கு நமது அரசியலமைப்பு உறுதிப்பாட்டை நினைவில் கொள்ளுமாறு அனைத்து குடிமக்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் “என விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் ஆன்லைனில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் சத்யஜித் ரத் (இணை பேராசிரியர், IISER- புனே) மற்றும் ராகுல் ரோய் (ISI- புது தில்லி) அவர்களால் தயாரிக்கப்பட்டது.

Comments are closed.