புனே சன்பர்ன் இசை விழாவில் குண்டு வைக்க திட்டமிட்ட சனாதன் சன்ஸ்தா

0

புனே சன்பர்ன் இசை விழாவில் குண்டு வைக்க திட்டமிட்ட சனாதன் சன்ஸ்தா

சமீபத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை கைது செய்த ஐந்து இந்துவா தீவிரவாதிகள், புனே வில் கடந்த வருடம் நடைபெற்ற சன்பர்ன் வருடாந்திர இசைத் திருவிழாவில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப்படை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த ATS அதிகாரிகள், கடந்த 2017 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற சன்பர்ன் இசைத் திருவிழா இந்து கலாச்சாரத்திற்கு எதிராக உள்ள காரணத்தினால் அந்த விழாவில் குண்டு வைக்க கொந்தலேகர் மற்றும் ரவுத் திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு வரையில் கோவாவில் நடைபெற்ற இந்த இசைத் திருவிழா 2016 ஆம் ஆண்டில் இருந்து புனேவிற்கு மாற்றப்பட்டது.

இத்துடன் சினிமா தேட்டர்கள் மற்றும் நாடக அரங்கங்களில் குண்டு வீசியது மற்றும் இந்து மதத்திற்கு எதிராக செயலாற்றும் தனிநபர்களை கொலை செய்தது மற்றும் கொலை செய்ய திட்டம் தீட்டியது என்று இவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

கடந்த செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்ட ஐந்து இந்துத் தீவிரவாதிகளில் வைபவ் ரவுத், சரத் கலஸ்கர், சுதன்வா கொந்தலேகர் மற்றும் ஸ்ரீகாந்த் பங்கர்க்கர் ஆகிய நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய ATS, இவர்களின் காவலை நீட்டிக்க கோரியது. ATS நீதிமன்றத்தில் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நான்கு பேரின் போலீஸ் காவலை மேலும் 7 நாட்களுக்கு நீடித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சமீர் அத்கர் உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்தாவது குற்றவாளி அவினாஷ் பவார் ஆகஸ்ட் 31 நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். இந்த ஐந்து நபர்களும் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று ATS தெரிவித்த போதிலும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு இதனை மறுத்துள்ளது.

Comments are closed.