புர்காவை போல் இந்துப் பெண்கள் அணியும் முத்திரையையும் தடை செய்ய வேண்டும்! பாடலாசிரியர்

0

புர்காவை தடை செய்தால் இந்து பெண்கள் தலையில் போட்டுக் கொள்ளும் கூங்கட் எனப்படும் முக்காடையும் தடை செய்ய வேண்டும் என பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

இலங்ககையில் தீவிவாதத்தை தடுக்கும் விதமாக இலங்கை அரசு புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் அனைத்து உடைகளுக்கும் தடை விதித்தது. இலங்கை விதித்ததைப் போல சிவசேனா அமைப்பு, இந்தியாவிலும் புர்கா மற்றும் முகத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என மோடிக்கு கோரிக்கை வைத்தது.

சிவசேனாவின் இந்த கோரிக்கைக்கு இந்தி மூத்த பாடல் ஆசிரியரான ஜாவேத் அக்தர், “இந்தியாவில் புர்காவை தடை செய்ய சட்டம் கொண்டுவருவதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதைபோல, இந்து பெண்கள் சேலையால் தங்கள் தலை மற்றும் முகத்தை மறைக்கும் படி முக்காடு போடுகின்றனர். ஆகையால் அதையும் தடை செய்ய வேண்டும். என்னை பொறுத்த வரை கூங்கட் முக்காடு மற்றும் புர்கா இரண்டுக்குமே தடை விதிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் வீட்டில் உள்ள பெண்கள் யாரும் புர்கா அணிவதில்லை” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.