புறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்

0

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம்,  ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில், இந்த மதவாத சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் என ஒரு பக்கம் தொடர, மத்திய, மாநில அரசுக்கு நேரடியாக பெரியளவில் எதிர்ப்பை காட்டும் வகையில் முஸ்லிம்கள், வங்கிகளிலிருந்து தாங்கள் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவி திவாலாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் இன்று சென்னை சாகின் பாகில் 28வது நாள் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் புறாக்கள் பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். சென்ற வாரம் வெள்ளிக்கிழமை கருப்பு பலூன்களை பறக்கவிட்டு  போராட்டத்தில் கவனத்தை ஈர்த்தனர்.

Comments are closed.