புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி தான்! பிரச்சாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பிரேமலதா

0

வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த போது புல்வாமா தாக்குதல் நடத்தியவர் பிரதமர் மோடி தான் என்று கூறிய பிரேமலதா.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ற்ப்ரல் 18ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளுக்காக தீவர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரேமலதா. கோவையில் பாஜக கட்சி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட  பிரேமலதா, புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி என்று கூறியுள்ளார். மேலும் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முரசு சின்னத்திற்கு வக்களியுங்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரேமேலதா புல்வாமா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்தவர் மோடி என்பதற்கு பதிலாக, மோடி தான் புல்வாமா தாக்குதலை நடத்தினார் என்று மீண்டும் கூறியுள்ளார். இதனால் பாஜகவினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Comments are closed.