பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு:போலீஸ் மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக அரசு தரப்பு சாட்சி

0

 

பெங்களூர்:கேரள பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி 31-வது நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக போலீஸ் பதிவுச் செய்த சதித்திட்டத்தில் முக்கிய அரசு சாட்சியான ரஃபீக், போலீஸ் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
2007-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் குடகில் உள்ள இஞ்சி தோட்டத்தில் நடந்த இஃப்தார் விருந்தில் நடந்த பெங்களூரில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான சதித்திட்டத்தில் தடியண்டவிட நஸீர் என்பவருடன் மஃதனி பங்கேற்றார் என்று இஞ்சி தோட்ட தொழிலாளியான ரஃபீக் வாக்குமூலம் அளித்தார் என்பது அரசு தரப்பு வாதமாகும்.இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ரஃபீக் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது:நான் இதற்கு முன்பு மஃதனியை கண்டதில்லை.இப்போதுதான் முதன் முதலாக நீதிமன்றத்தில் வைத்து அவரை பார்க்கிறேன்.மஃதனிக்கு எதிராக போலீசிடம் இதற்கு முன்பு நான் வாக்குமூலம் அளிக்கவில்லை.தீவிரவாத வழக்கில் குற்றவாளியாக சேர்ப்போம் என்று போலீஸ் என்னை மிரட்டி சில பேப்பரிகளில் என்னை பலம் பிரயோகித்து கையெழுத்தை வாங்கியது.’ என்று கூறிய ரஃபீக், மஃதனியை ஆதாரத்தை பதிவுச் செய்ய குடகிற்கு அழைத்து வந்தபோது அடையாளம் கண்டதாக கூறும் அரசு தரப்பு வாதத்தையும் மறுத்தார்.ரஃபீக்கின் வாக்குமூலத்தை சி.ஆர்.பி.சி 164 பிரிவின் படி நீதிமன்றம் பதிவுச் செய்தது.
பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக இரண்டு சதித்திட்ட வழக்குகளை கர்நாடகா போலீஸ் மஃதனிக்கு எதிராக பதிவுச் செய்துள்ளது.குடகு மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள மஃதனியின் வீட்டில் சதித்திட்டம் தீட்டியதாக அரசு தரப்பு மஃதனி மீது குற்றம் சாட்டுகிறது.குடகு சதித்திட்டம் தீட்டிய வழக்கில் ரஃபீக் உள்பட 4 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இதில் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த சாட்சியான பிரபாகரன் கடந்த 28-ஆம் தேதி நடந்த விசாரணையில் மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
இவ்வழக்கின் விசாரணை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments are closed.