பெட்ரோல் விலை கடும் உயர்வு: மும்பையில் லிட்டர் 79 ரூபாய்

0

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு $3.50 டாலர் அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோல் விலை மோடி ஆட்சியின் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பையில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 79.41 ரூபாய்களாக உயர்வடைந்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை பெற்றோலின் விலை லிட்டர் ஒன்றிற்கு 13 பைசாவும், டீசலின் விலை லிட்டர் ஒன்றிக்கு 25 பைசாவும் உயர்த்தப்படுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் GST யின் கீழ் வராத காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகிறது. திங்களன்று டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 70.30 ரூபாயும், கொல்கத்தாவில் லிட்டர் ஒன்றிற்கு 73.05 ரூபாய்களும், சென்னையில் லிட்டர் ஒன்று 72.87 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அது போன்று டீசலின் விலை லிட்டர் ஒன்றிக்கு 58.62 ரூபாய், 61.27 ரூபாய், 62.26 ரூபாய்  என டில்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 7 ரூபாய்களுக்கு மேல் அதிகரித்த போதிலும் தினசரி விலை நிர்ணயம் தொடரும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “பெட்ரோல் டீசலின் தினசரி விலை நிர்ணயம் சிறந்தே. ஜூன் 16 ஆம் தேதி பெட்ரோல் டீசலின் தினசரி விலை நிர்னையத்தை துவங்கிய போது முதலில் விலை குறைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை அடுத்து இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தையின் அடிப்படையில் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயிப்பதை விட தற்போது உடனுக்குடன் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல் டீசலின் விலைகளை நிர்ணயம் செய்வது பொதுமக்களுக்கு பயன்தரக்கூடியது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது போன்ற விலை நிர்ணயம் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் தற்போதைய சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு சீராக இல்லாத காரணத்தினால் இந்த நிலையை தங்கள் ஆட்சி எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களில் இரண்டு நாடுகளான சவூதி மற்றும் ஈராக் எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தகது.

Comments are closed.